
முருக வழிபாட்டின் பழமையை பறை சாற்றும் திருத்தலம் கதிர்காமம். இலங்கையின் தென் கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கப்பராளைமார் என்னும் சிங்களர்கல் தங்களின் வாயைக் கட்டி திரைக்கு பின்புரம் முருகனுக்கு சிலை கிடையாது. கருவறையில் உள்ள பெட்டிக்கே பூஜை செய்கிறார்கள். இதை விட ஆச்சரியம் என்ன என்றால் திரைக்குப் பின்புறம் முருகனுக்கு சிலை கிடையாது. கருவறையில் உள்ள பெட்டிக்கே பூஜை நடக்கும் பக்தர்கள் இதை காண முடியாது.
சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் கதிர்காமம் எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி கதிரை நாயகன் கதிரை வேலன் மாணிக்க சுவாமி கந்தக் கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை திருமணம் புரிந்த முருகன் தனக்கு விருப்பமான இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார். இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திர்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கல் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.
காவடி எடுத்தல் கற்பூரச்சட்டி எடுத்தல் அங்கப்பிரதட்சணம் செய்தல் தேங்காய் உடைத்தல் தீ மிதித்தல் என நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். கதிர்காம மலையிலிருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திரு நீறாகத் தருகின்றனர். இங்குள்ள பழங்குடி வேடுவர்கள் முருகனியத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர். அருணகிரி நாதர் வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே என பாடியுள்ளார். கதிர்காமத்தில் பூனை செய்யும் கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.

எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கல் மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் கி மு 101ல் கோயில் எழுப்பினான். வினாயகர் பெருமாள் தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் சன்னதி தெற்கு நோக்கியும் வள்ளி சன்னதி வடக்கு நோக்கியும் எதிரெதிரில் உள்ளன. இங்கு முருகனின் கருவறை வண்ணத் திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை கப்புறாளைமார் திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பிப்பர்.
காஷ்மீரில் இருந்து இங்கு வந்த துறவி கல்யாணகிரி 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்ட இவரது சமாதி உள்ளது. முத்துலிங்க சுவாமிகல் என அழைக்கப்படும் இவர் வழிபட்ட சரவணபவ என்னும் சடாட்சர யந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
எப்படி செல்வது
கொழும்பில் இருந்து 280 கிமீ கண்டியில் இருந்து 210 கிமீ
விசேஷ நாட்கள்
வைகாசி விசாகம் ஆடி அமாவாசை திருக்கார்த்திகை தை முதல் நாள் மாசி மகம்