காய்ச்சல் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா……………புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வாருங்கல் உங்களது பிரச்னை தீர்ந்துவிடும்.
ஒரு காலத்தில் அரசமரங்கள் சூழ்ந்த காடான இங்கு அத்தி மரத்தால் ஆன நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பிற்காலத்தில் கோயிலை விரிவுபடுத்தும் போது கருவறையில் வரதராஜப்பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். இதன் பின் நரசிம்மருக்கு பிரகாரத்தில் சன்னதி கட்டப்பட்டது.

ஐந்தடி உயரமுள்ள மூலவர் வரதராஜர் சிலை பூமியைத் தோண்டும் போது கிடைத்ததாகும். அதன் பின் கோயிலுக்கு அருகிலுள்ள வைத்திக்குப்பம் என்னுமிடத்தில் புதையுண்டு கிடைத்த ராமர் சீதா லட்சுமணன் அனுமன் கிருஷ்ணன் சந்தானகோபாலன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கட்லஊர் அழகானந்த முதலியாரின் நிலத்தை தோண்டும்போது 800 ஆண்டுகல் பழமை மிக்க சுந்தர அனுமன் சிலை கிடைத்தது. இவருக்கும் சன்னதி இங்குள்ளது.
புதுச்சேரி நகரை பிரெஞ்சுப்படையினர் தாக்கியபோது புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் சிலைகள் இத்தலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாக ஆனந்த ரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் கூறியுள்ளார். முஸ்லிம் படையெடுப்பின் போது ஏராளமான விக்கிரகங்கள் இக்கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இங்குள்ள கண்ணாடி அறையில் 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் சுதை வடிவங்கல் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சொத்து தகராறு உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கு வந்து வேண்டினால் மனஸ்தாபங்கள் நீங்கி இருவரும் ஒன்றிணைவார்கள்

தமிழ் மாதம் பன்னிரண்டையும் குறிக்கும் விதத்தில் 12 கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் அப்ரகாம் என்னும் கந்தக அமிலம் கலந்துள்ளது. காய்ச்சல் தலைவலியை குணப்படுத்தும் சக்தி இதற்குண்டு.
எப்படி செல்வது
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிமீ
விசேஷ நாட்கள்
மாசி தெப்ப உற்சவம் சித்திரை ராம உற்சவம் வைகாசி பிரம்மோற்சவம் ஆவணி பவித்ர உற்சவம்