
பகுதி வாரியாக பல மொழிகள் பேசப்படுகின்றன. ஓர் இடத்தில் பேசும் மொழி இன்னொரு இடத்தில் வசிப்பவருக்கு பெரும்பாலும் புரியாது. ஆனால் மவுனம்…………………….
உலகம் முழுவதும் பொதுவான மொழி ஒலியே இல்லாத மொழி இது மூன்று வகைப்படும்.
சாதாரண மவுனம்
எதுவும் பேசாமல் அமைதி காப்பது. நாவசைவு இருக்காது. பேசக்கூடாத இடத்திலும் பேச தேவையில்லாத இடத்திலும் இந்த வகையை கடைப்பிடிப்பது சிறப்பு தரும். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிப்பது இந்த வகையைத்தான். இதில் நாக்கு தான் அசையக் கூடாது. அதே வேளை தலையசைத்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம். விரலசைவின் மூலம் புரிய வைக்கலாம். கண்ணசைவின் மூலம் காரியத்தை சாதிக்கலாம்.
பூரண மவுனம்
இதற்கு வாய் மட்டுமல்ல. மனமும் ஓய்வெடுக்க வேண்டும். சிந்தனை அலைபாயக் கூடாது. இது ஒரு வகை தியானம். ஆன்மிகத்தில் குரு கற்றுக்கொடுக்கும் வித்தை.
பரி பூரண மவுனம்
இது தான் மிகவும் கடினமானது. நாக்கு மட்டுமல்ல. உடலில் எந்த ஒரு பகுதியும் அசையக்கூடாது. எந்த சைகையும் செய்யக்கூடாது. மரக்கட்டை போல் இருக்க வேண்டும். உடல் இதுதான் கடின மவுன ரொம்பவும் சிரமமானது. அத்தனை சுலபத்தில் வசப்படாது. புலன்கள் அடங்கி ஒடுங்கினால் மட்டுமே சாத்தியப்படும். மவுனத்தால் வாக்கில் தெளிவும் புத்தியில் அமைதியும் ஏற்படும். மகான்களின் தீர்க்கமான முடிவுகளுக்கும் அவர்கள் வழங்குகிற அருள் வாக்குக்கும் மவுனமே காரணம். மனிதனைப் பண்படுத்துகிறது மவுனம். பேச்சு என்பது சில்வர் என்றால் மவுனம் என்பது தங்கம் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு மவுனம் காப்போம்.
நன்றி சிறுவர் மலர்.