தந்தையை தண்டித்த நாயன்மார்

அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.  சிவம் என்பதற்கு வீரம் என்றும் பொருள் உண்டு.  நாயன்மார்களில் பலர் உள்ளம் உருகி பக்தியில் ஈடுபட்டனர்.  இதற்கு மாறாக சியர் சிவ வழிபாடு சிவன் அடியார்களுக்கு இடையூரு செய்பவர்கள் மீது கோபம் கொள்ள தயங்கியதில்லை.

இவர்களுக்கு அரசு ஆட்சி அதிகாரம் பற்றிய பயம் கிடையாது.  சிவபக்தி மட்டுமே பெரிதாக தோன்றியது. சிவனை  நிந்திப்பவர்களை  முரட்டுத்தனமாகத் தண்டித்தனர்.  இவர்களின் வீரன் கண்ட சிவன் வீடு பேறு அளித்து மகிழ்ந்தார்.  அவர்களில் ஒருவரே சண்டேஸ்வர நாயனார் எனப்படும் விசார சருமர்.

 சோழ நாட்டில் திருசேய்ஞலூரில் வாழ்ந்த எச்சதத்தன் என்னும் அந்தணரின் மகனாக பிறந்தார்.  முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இளமையிலேயே வேதங்கள் கற்றார்.  ஏழுவயது சிறுவனான விசார சருமன் ஒரு நாள் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.  அங்கு ஒருவன் பசுக்களை முரட்டுத்தனமாக அடிப்பதைக் கண்டு வருந்தினார். சிவ பூஜைக்கு தேவையான பஞ்ச கவ்யம் என்னும் பால் தயிர் வெண்ணெய் நெய் சாணம் என பொருட்களைத் தரும் பசுக்களை வதைப்பது பாவம் என பசுக்களின் உரிமையாளரிடம் தெரிவித்ததோடு அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

புல்வெளியில் பசுக்களை மேயவிட்டு தண்ணீர் காட்டி அன்பைப் பொழிந்தார்.  விசாரசருமர் அருகில் நின்றாலே பசுக்கள் தாமாக பாலைச் சொரிந்தன. ஆற்று மணலில் சிவலிங்கத் திருமேனி அமைத்து பால் அபிஷேகம் செய்து தினமும் வழிபாடு செய்தார்.  ஔர் நாள் இதைக் கண்ட முட்டாள் ஒருவன் விசார சருமன் பசும்பாலை மண்ணில் ஊற்றி விளையாடுகிறான் என எச்சதத்தனிடம் தெரிவித்தான். மறு நாள் காலையில் அவர் மகனுக்கு தெரியாமல் மாடுகளைப் பின் தொடர்ந்தார்.  ஆற்றங்கரையில் இருந்ட குரா மரத்தின் பின்புறம் ஒளிந்து நின்ரார்.  வழக்கம் போல் விசாரசருமர் மண் லிங்கம் அமைத்ஹ்டு அபிஷேகம் செய்ய தொடங்கினார். எச்சதத்தன் ஒரு கோலால் மகனின் முதிகில் அடித்ததோடு பால் இருந்த பானியயை காலால் உதைத்தார்.  வெகுண்டு எழுந்த விசாரசருமர் பூஜைக்காக இஉர்ந்த பாலிய எட்டி உதைத்த உம்மை தண்டிப்பேன் என்று கையில் கோலை எடுத்தார். அது மழு என்னும் ஆயுதமாக மாறவே தந்தைய்ன் கால்களை வெட்டி எறிந்தார்.  அந்த இடத்திலேயே எச்சதத்தன் இறந்தார். பின் சிவ பூஜையை தொடர்ந்தார்.   அப்போது சிவ்ன அம்மையப்பராக காளை வாகனத்தில் காட்சியளித்து  பிள்ளாய் இனி யானே உமக்கு தந்தையானோம்.

சிவனடியார்களுக்கு நீயே தலைவன் ஆவாய்.  யான் உண்பன உடுப்பன அணிவன அனைத்தும் உனக்கே ஆகுக   உனக்கு சண்டேஸ்வரர் என்னும் பதவியும் அளித்தோம்  என வரம் கொடுத்தார்.  தன் சடையில் சூடிய கொன்றை மாலையை விசாரசருமரின் தலை மீது சூட்டினார். தந்தை எச்சதத்தனும் சிவனருளால் உயிர் பெற்றார்.

சிவன் கோயில்களில் கருவறைக்கு அருகில் சண்டேஸ்வரர் சன்னதி இருக்கும்.  திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாட்டின் போது சண்டிகேஸ்வரர் சுவாமியோடு வீதிகளில் எழுந்தருள்வார்.  கோயிலில் சிவனுக்கு தினமும் சாற்றப்படும் பூமாலைகள்  ஆடைகள்   நிவேதனங்கள் இவருக்கு உரியதாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s