அச்சம் என்பதில்லையே

  காஞ்சி மகாசுவாமிகளை தேடி மடத்திற்கு வந்த அன்பர் ஒருவர் என் மகன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான்  முக்கியமாக பள்ளிக்கூடத்தில் தேர்வு என்றால் அளவு கடந்த பயம். படித்த கேள்விக்கான விடை கூட அவனுக்கு மறந்து போகிறது  அவன் மனதில் தைரியம் உண்டாக என்ன செய்வதென்றே தெரியவில்லை என வருந்தினார்.

 காமாட்சி குங்குமப் பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து ஆசீர்வாதித்த சுவாமிகள் பேசத் தொடங்கினார்.  பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கல். அந்த ஸ்லோகத்தை படித்தால்  மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும். 

இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். ராவணன் அணியிலிஉர்ந்த முக்கியமான வீரர்கள் போடில் தோற்றனர். அதைக் கண்கூடாகப் பார்த்தும் கூட ராமருக்குப் பணிய மறுத்தான் ராவணன். சிறையில் இருந்து சீதாதேவியை விடுவிக்க சம்மதிக்கவில்லை  ஆக்ரோஷத்தோடு சண்டையிட்டுக்

கொண்டிருந்தான்  ஆனால் ராமருக்கு மனதில் சோர்வு எழுந்தது.  எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது.  இன்னும் இவன் பணியவில்லையே  என்னதான் வழி  என  கவலைப்பட்டார்.

அப்போது வந்த அகத்திய முனிவர்  சூரியபகவானை  பிரார்த்தனை செய்யும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார்.  அவ்வளவு தான்….. ராமரின் சோர்வு காணாமல் போனது.  வீரம் பொங்கியது.  மறு நாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்தார்.  வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புகிறவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லை சூரியனை வழிபட்டால் போதும்  தைரியம் பிறக்கும்   வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்.  மகாசுவாமிகளின் வழிகாட்டுதல் கேட்ட அன்பரின் மனம் நெகிழ்ந்தது. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மகனை பாராயணம் செய்ய சொல்வதாக கூறி மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s