பைரவர் பிறந்த வரலாறு

தாருகாசுரன் என்பவன் சிவனை நோக்கி தவமிருந்து சாகாவரம் வேண்டினான். உலகத்தில் பிறந்தவர்கள் இறந்தாக வேண்டும் என்ற சிவன் ஏதேனும் ஒரு பொருளால் அழிவை வேண்டும்படி தாருகனிடம் கூறினார். ஆணவம் கொண்ட அசுரன் தன்னை ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு வரலாம் என வரம் பெற்றான். அவர்களது இனத்தையே அழிக்க முடிவெடுத்தான். பயந்து போய் பார்வதியிடம் முறையிட்டனர் தேவர்கள்.  சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் ஒரு பங்கை எடுத்து ஒரு பெண்ணைப் படைத்தாள் பார்வதி.  விஷத்தை காளம் என்பர் காளத்தில்  இருந்து தோன்றிய பெண் காளி எனப்பட்டாள். அவள் கோபத்துடன் தாருகன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள்.

அந்தக் கோபம் அனலாக மாறி அசுரனைச் சுட்டெரித்தது.  பின் அந்தக் கனலை பயங்கர வடிவுள்ள குழந்தையாக காளி மாற்றினாள்.  அந்த குழந்தையையும் காளியையும் தன்னுள் அடக்கிய சிவன் அவள் உருவாக்கியது போலவே எட்டுக் குழந்தைகளை உருவாக்கினார். பின் அவற்றை ஒருங்கிணைத்து பைரவர் என பெயர் சூட்டினார். இதன் அடிப்படையில் சில கோவில்களில் அஷ்ட பைரவர் சன்னதி அமைந்திருக்கும்.  சீர்காழி சட்டை நாதர் கோயிலில் அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம்.   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s