பெரியவாளின் திருவிளையாடல்

யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?”..-ஒரு சின்னப்பையன் பெரியவாளிடம்.(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை. ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ , இதெல்லாம் சீக்கிரமா வித்தைகளைக் கத்துண்டு ‘ஒபே பண்ண ஆரம்பிச்சுடும் . ஆனா, என்னைப்பார்க்க வர்ற மனுஷாள்ல பலபேர் நான் சொல்ற எதையுமே லட்சியம் செய்யறது கிடையாது. என்னைக் கேட்டா, அந்த மாதிரியானவாளைவிட இந்த ம்ருகங்கள் எவ்வளவோ மேல்!”

ஒரு சமயம் மகாபெரியவா யாத்திரை பண்ணிண்டு இருந்தார்.மடத்து வழக்கப்படி யானை,குதிரை, ஒட்டகம் எல்லாமும் ஊர்வலமா அவர் கூடவே வந்துண்டு இருந்ததுஒரு நாள் சின்ன கிராமம் ஒண்ணு வழியா பெரியவா நடந்துண்டு இருந்தார்.வழி முழுக்க பலரும் பாதசேவனத்துலேர்ந்து பலவிதமா மரியாதை பண்ணி, ஆசார்யாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு இருந்தா,அந்த சமயத்துல எங்கேர்ந்தோ ஒரு சின்னப் பையன் ஆசார்யா முன்னால வந்து நின்னான்பரமாசார்யாளோட பவித்ரமான அனுஷ்டானத்துக்கு இடைஞ்சலா ஏதாவது செஞ்சுடுவானோன்னு எல்லாரும் பயந்து அவனை அங்கேர்ந்து நகர்ந்து போகச் சொல்லி சிலர் சொன்னா. ஆனா, அவாளை எல்லாம் பார்த்து சும்மா இருங்கோ அப்படிங்க மாதிரி கையால ஜாடை காட்டினா மகாபெரியவா.”என்னப்பா குழந்தை ஒனக்கு என்ன வேணும்? பழம் ஏதாவது தரட்டுமா?” அன்பா கேட்டார் ஆசார்யா.”எனக்குப் பழமெல்லாம் வேண்டாம். யானை,குதிரை, ஒட்டகம் எல்லாம் வர்றதைப் பார்த்ததும் ஏதோ சர்க்கஸ்தான் காட்டப் போறேள்னு நினைச்சுண்டு வந்தேன்.எப்போ எங்கே வித்தை காட்டப் போறேள்?” கேட்டான் அந்த சின்ன பையன்.”இல்லைப்பா எனக்கு வித்தையெல்லாம் காட்டத் தெரியாது!””அப்படின்னா, இதையெல்லாம் எதுக்கு உங்க கூட கூட்டிண்டு போறேள்?” கொஞ்சம் துடுக்குத்தனமாவே கேட்டான் பையன்  “நீ ராஜாக்கள்னு கேள்விப்பட்டிருக்கியோ .ராஜாக்கள் காலத்துல என்னை மாதிரி சன்யாசிகள் இருக்கற மடத்துக்கு யானை, குதிரை, பசு,காளைமாடு, ஒட்டகம் இப்படிப் பலதையும் குடுப்பா. அந்த மாதிரி காலகட்டத்துல குடுக்கப்பட்டவைகளோட பாரம்பரியவா வந்ததுதான் இதெல்லாம்.–பெரியவா.

“ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை. ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ, இதெல்லாம் சீக்கிரமா வித்தைகளைக் கத்துண்டு ‘ஒபே பண்ண ஆரம்பிச்சுடும். ஆனா, என்னைப்பார்க்க வர்ற மனுஷாள்ல பலபேர் நான் சொல்ற எதையுமே லட்சியம் செய்யறது கிடையாது.என்னைக் கேட்டா அந்தமாதிரியானவாளைவிட இந்த ம்ருகங்கள் எவ்வளவோ மேல்!”–ஆசார்யா.ஆசார்யா சொன்னது அந்தச் சிறுவனுக்கு எந்த அளவுக்குப் புரிஞ்சுதோ தெரியலை. சர்க்கஸ் இல்லைங்கறதை மட்டும் புரிஞ்சுண்டு அவன் ஓடிப் போயிட்டான். ஆனா, மகாபெரியவா சொன்னதோட உள் அர்த்தம் அங்கே இருந்த பலருக்கும் நன்னா புரிஞ்சுது. ஆசார்யாகூட வந்த மடத்து சிப்பந்திகள் கிட்டே சிலர் அதை வருத்தமாகவும் தெரிவிச்சா.இது பரமாசார்யாளுக்கும் தெரியவந்தது. அதனால அன்னிக்கு தரிசனம் தர்ற சமயத்துல ஆசார்யா, எல்லாருக்கும் கேட்கறாப்புல கொஞ்சம் உரக்கவே ஒரு பாரிஷதர்கிட்டே, மடத்துக்கு என்னைப் பார்க்கறதுக்கும், நான் சொல்றதைக் கேட்டு அனுசரிக்கறதுக்காகவும் எத்தனைபேர் வரான்னு நினைக்கறே? இங்கே இருக்கிற யானை,குதிரை, ஒட்டகத்தை வேடிக்கை பார்க்க வர்றாப்புல என்னையும் பார்க்க வர்றா அவ்வளவுதான்!” அப்படின்னு சொன்னார் பரமாசார்யா.  ஏதோ கடமைக்கு வந்து தன்னை தரிசிக்கறது முக்கியமில்லை ஆசார அனுஷ்டானங்களை சிரத்தையா கடைப்பிடிக்கணும்கறதை எல்லாரும் உணரணும்கறதுக்காகவே அப்படி ஒரு திருவிளையாடலை பண்ணினா பரமாசார்யா.

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s