பூவன் பழம்   மொந்தன் பழம் பேயன் பழம்

அனுசுயா எனும் அனசூயை மஹா தபஸ்வினி.

அத்ரி மஹரிஷியின் மனைவி. இவர்கள் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்று வரம் பெற்றவர்கள.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அனுசுயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள். அனுசுயையும்  தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினார் . அனுசுயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அன்னையின் அப்பழுக்கற்ற பாசத்தினை மூவரும் அன்பவித்து வந்தனர்.

மூவரும் அவரரவர் லோகத்தில்இல்லாததால் மூன்று லோகமும்வெறிச்சோடியது.

மூன்று தேவியரும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர். மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமம் வந்தனர். இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னை அனுசுயையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். குழந்தை வடிவில் இருந்த பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும், தங்களைத் தாய் அனுசுயையிடமிருந்து இருந்து பிர்த்துவிடுவார்களோ என்று எண்ணி, மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.

பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன்  என்றால் பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.

விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.

சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாவக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்..

முப்பெருந்தேவியரும் அனுசுயையிடம் அத்ரியின் ஆசிரமத்தில் குழந்தைகளாக இருந்த தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அனுசுயைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. மூவரும் சுய ரூபம் அடைய அனுசுயா பிரார்த்தனை செய்தார். மூவரும் தங்கள் சுய உருவம் அடைந்தனர். மஹாவிஷ்ணுவிடம் அனுசுயா பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், விஷ்ணு அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை மும்மூர்த்திகளும் உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர். அவரே தத்தாத்ரேயர். அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.

ருசியில் பேயன் பழம் அலாதியானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s