பெரியவாளின் குஸும்பு -ஹாஸ்ய லீலை

அதோ.. அங்க நார்மடி [தலையை முண்டனம் பண்ணிகொண்டவர்கள்] கட்டிண்டு இருக்கா பாரு ஒரு பாட்டி!…“அந்த பாட்டிகிட்ட போய், அவா ஸுமங்கலியான்னு கேட்டுண்டு வா!…”- பெரியவா*.ஒருநாள் தன்னுடைய ப்ரியமான சிஷ்யர்களோடு விஸ்ராந்தியாக பெரியவா பேசிக் கொண்டிருந்தார். பேச்சில் ஏதோ ஆதி ஆச்சார்யாளை பற்றி வந்தது. ஆச்சார்யாளின் முக்யமான நான்கு சிஷ்யர்களில், பத்மபாதரைப் பற்றி பெரியவா சொல்ல ஆரம்பித்தார்.“ஆச்சார்ய பக்தின்னா இப்டித்தான் இருக்கணும். குரு… வந்து, “இங்க வா!”ன்னதும், நடுவுல போற ஜலப்ரவாஹத்தை கூட சிந்தனை பண்ணாம, கிடுகிடுன்னு ஆச்சார்யாள்கிட்ட ஓடிட்டாரே!…..

[ஒரு சின்ன மௌனம்….அதற்குள் சிஷ்யர்களோடு ஒரு விளையாட்டு விளையாட தீவ்ரமான குஸும்போடு கூடிய divine plan…..]“ஆச்சார்யாளுக்கு கெடச்ச மாதிரி சிஷ்யா யாருக்குடா கெடைப்பா ! அப்டிப்பட்ட சிஷ்யா கெடைக்கறதுக்கு, குருவும் புண்யம் பண்ணியிருக்கணுமோல்லியோ?….”சிரிக்கும் கடைக்கண்ணால், சிஷ்யர்களை பார்த்தார்.வேதபுரி மாமா குழந்தையிலும் குழந்தை மனஸ் கொண்டவர். ஜகத்குருவின் அனுக்ரஹ குஸும்பை அறியாமல் வாக்கு குடுத்தார்….“ஏன் இப்டி சொல்றேள்? நா…. இருக்கேன்! பெரியவாளோட சிஷ்யாளும், ஆச்சார்யாளோட சிஷ்யா மாதிரிதான்-னு என்னோடது-ன்னு எதுவுமில்லாம பெரியவாளே ஸர்வமும்-னு இருப்பேன்…”[ஆஹா! வலைக்குள் விழுந்துவிட்டார்!..]“ஸெரி ….போங்கோ! …”ஒண்ணும் தெரியாத மாதிரி எழுந்து போய்விட்டார்.

ரெண்டு நாள் கழித்து, ஶ்ரீமடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண நல்ல கூட்டம்! பெரியவா, வேதபுரி மாமாவைக் கூப்பிட்டார்.“….அதோ.. அங்க நார்மடி [தலையை முண்டனம் பண்ணிகொண்டவர்கள்] கட்டிண்டு இருக்கா பாரு ஒரு பாட்டி!…. சுத்தி அவளோட அஞ்சு பசங்களும் நிக்கறாளோன்னோ!”“தெரியறது“அந்த பாட்டிகிட்ட போய், அவா ஸுமங்கலியான்னு கேட்டுண்டு வா!…”[ஸூதுவாதையெல்லாம் க்ருஷ்ணாவதாரத்திலேயே முடிச்சுண்டு மூட்டை கட்டி வெச்சாலும், விட்டகுறை தொட்டகுறை பகவானுக்கும் உண்டு]எசகுபிசகாக வாயை விட்டு, மாட்டிக்கொண்ட வேதபுரி மாமா, மெல்ல பெரியவாளிடம் குழைந்தார்….“வந்து…அவா….. நார்மடின்னா! அவாகிட்ட போய் ஸுமங்கலியான்னு ….”அவர் முடிக்கவில்லை, உடனே முகத்தை கொஞ்சம் தூக்கி வைத்துக் கொண்டார்.[ரொம்ப மனஸு நொந்து, வருத்தமா இருக்காராம்!]

“அதான்! அதான் சொன்னேன்! ஆச்சார்யாளுக்கு கெடச்ச சிஷ்யா மாதிரி எனக்கு இல்லேன்னு…..”வேதபுரி மாமா….. பாவம்! ஆச்சார்யாளோட சிஷ்யா மாதிரி இல்லாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்…..” இல்ல…இல்ல! நா… கேட்டுண்டு வரேன்..! கேட்டுண்டே வரேன்! சுத்தி தடி தடியா நாலஞ்சு பேர், அந்த பாட்டியோட பசங்க….இருக்காளேன்னு…“பத்மபாதர் இப்டியா யோஜிச்சிண்டு நின்னார்? எனக்கு அவ்ளோதான் குடுப்பினை…!”வேதபுரி மாமா உள்ளூர நடுங்கிக் கொண்டே மெல்ல அந்தப் பாட்டி அருகில் சென்றார்…..“மாமி…..நீங்க ஸு…ஸுமங்கலியா?ன்னு பெரியவா கேட்டுண்டு வரச் சொன்னா…”பளிச்சென்று பாட்டியிடமிருந்து பதில் வந்தது……“ஆமா! நா…. ஸுமங்கலிதான்!….. பெரியவா கேட்டாளா?…”வேதபுரி மாமாவுக்கு ஸத்யமாக ஒரு க்ஷணம் ஒன்றுமே புரியவில்லை. அந்தப் பாட்டியின் பிள்ளை சொன்னார்…..“நாங்க…… ஸுமங்கலி க்ராமம்….”பாவம் வேதபுரி மாமா. அங்கிருந்து பெரியவாளிடம் சென்றதும், முகத்தில் அப்படியொரு விஷமக்களையோடு சிரித்துக்கொண்டே,“என்ன ஸுமங்கலிதானாமா?.”எத்தனை குஸும்பு  ஸ்வாமிகளுக்கு!வேதபுரி மாமா கண்களில் ஆனந்த வாரிதியோடு நின்றார். என்ன ஒரு அழகான விளையாட்டு!வேதபுரி மாமாவுக்கும் ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

பெரியவாளுடைய அத்தனை லீலைகளையும், ஹாஸ்யமோ, மனஸை கிடுகிடுக்க வைப்பதோ, எதுவாக இருந்தாலும், நாமும் அதைப் படிக்கும்போதும், கேட்கும்போதும் மானஸீகமாக அந்த பழைய காலத்துக்கே போய், அந்தந்த பாத்ரங்களாகவும் மாறி, ஒவ்வொரு க்ஷணமும் பெரியவாளை ஆனந்தமாக ஸ்மரித்துக் கொண்டிருக்கிறோம்.

*kn*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s