அறிவுக்கு அப்பாற்பட்ட…Super Apparatus.

வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை.” பேரன்….நட்சத்திரம் விசாகம்…இன்னும் பெயர் வைக்கலை. இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை.நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள். பெரியவாள் பார்வைபடும்படியாக. அன்று சங்கடஹர சதுர்த்தி. மடத்தின் இன்னொரு பகுதியில் கணபத்யதர்வசீர்ஷம் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவா,”கணபதி சுப்ரமண்யம்னு பெயர் வை என்றார்கள்.ஆடிட்டர் அக மகிழ்ந்து போனார். அன்று,சதுர்த்தி ஆனதால், கணபதி பொருத்தமான பெயர். அத்துடன் அவர்கள் குல தெய்வமான பழனி சுப்ரமணியத்தையும் சேர்த்து வைக்கச் சொல்லி விட்டார்களே! என்ன கருணை!

கன்னத்தில் போட்டுக் கொண்டார்,பரவசத்துடன். “அண்ணா மட்டும் இருந்தால் போதுமா? தம்பியும் வரட்டும்,” அதிர்ந்து போனார், ஆடிட்டர். அப்படியா!காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாதி வழியில், “வயிற்றைக் குமட்டுகிறது” என்று ஈனஸ்வரத்தில் கூறினாள்,இரண்டாவது மருமகள். “சுப்ரமண்யம்….சுப்ரமண்யம்…என்று பழநி மலை நோக்கிக் கும்பிடு போட்டார்,ஆடிட்டர். பெரியவாளின் நேத்திரங்கள், Scaning Apparatus-ஆ?இல்லை நம் அறிவுக்கு அப்பாற்பட்ட…Super Apparatus.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s