உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு என்பது ஒருவகை செடியின் மாவு நிறைந்த வேர்ப்பகுதி. இதன் அறிவியல் பெயர் சோலானம் டியூபரேசம்.  இந்த தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி கோதுமை சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.  உருளைக் கிழங்கு பற்றி சுவாரசியமான தகவல்கள் பல உண்டு.

தென் அமெரிக்கா லாம்பா கிராமத்தில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஊர்வலம் நடந்தது. முன் பகுதியில் மேளதாளத்துடன் நடனக்குழு சென்றது. பின் பகுதியில் பட்டு நூலில் நெய்த ஆடைகள் அணிந்து வண்ணமயமாக சென்றனர் மக்கள். அதில் ஆறு பேர் ஒரு பெரிய மூட்டையை தாங்கி பிடித்திருந்தனர். அதன் உள்ளே இருந்த வி ஐ பி வேறு யாருமல்ல. உருளைக்கிழங்கே தான். அங்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் உருளைக் கிழங்கு நடும் திருவிழாதான் அது.

தென் அமெரிக்காவில் உள்ளது ஆண்டிஸ் மலைப்பகுதி.. இதுதான் உருளைக்கிழங்கின் தாயகம். இந்த மலைத்தொடரில் தென் அமெரிக்கா நாடுகளான பொலிவியா சிலி பெரு ஆகியவை இணைந்துள்ளன.  ஐரோப்பாவிலிருந்து 16ம் நூற்றாண்டில் சென்ற ஸ்பானிஷிய படை தென் அமெரிக்காவை கைப்பற்றியது.  அது முதல் உருளைக்கிழங்கின் தலையெழுத்து மாறியது.  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருளைக்கிழங்கு கண்டு வியந்த ஸ்பானியர்கள் அதன் ருசியை அறிந்து ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். பின் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளுக்கேல்லாம் கொண்டு சென்றனர்.

பிறந்த மண்ணில் தான் வளர்வேன் என பிடிவாதம் செய்யாமல் சென்ற இடங்களில் எல்லாம் செழித்து மகசூல் தந்தது உருளைக்கிழங்கு.  கொஞ்சம் தண்ணீர் குடித்து வேர் நிறைய புரோட்டீன் பெருக்கி மனிதர்கள் வயிற்றை நிறைத்தது.  உலகம் எங்கும் 18ம் நூற்றாண்டில் விவசாயம் வளர்ச்சியடைந்தது. கோதுமை சோளத்துடன் உருளைக்கிழங்கையும் பயிரிட துவங்கினர். இதை ஊக்குவிக்கும் விதமாக ஐரோப்பா கண்டத்தில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.  உலக அளவில் ஆசிய நாடான சீனாவில் அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி நடக்கிறது.  அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 

தகவல் நன்றி  சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s