திருக்கடவூர்

எம பயம் அகற்றும் அற்புதத் திருத்தலம் திருக்கடவூர். இந்தத் தலத்தில் வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய வைபவங்கள் நிகழ்த்துவது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். இத்தனை சிறப்புகள் நிறைந்த திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅமிர்த கடேஸ்வரருக்கு தினமும் ஐந்து காலமும் எந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள் தெரியுமா?

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில், ஊருக்குள் அமைந்திருக் கிறது ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கே உள்ள காசி கங்கா தீர்த்த கிணற்றில் இருந்தே அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் என்று போற்றுகிறது சைவ சமயம். இவற்றுள் கடவூர் மயானம் என்பது திருக்கடையூரைக் குறிக்கும்.

பிரம்மாவுக்கு பல யுகங்கள் முடிந்த வேளையில், பிரம்மாவை எரித்து நீறாக்கினாராம் சிவபெருமான். பிரம்மாவை எரித்த தலம்- கடவூர் மயானமாம். தேவர்கள் இந்தத் தலத்தில் பிரம்மாவுக்காக தவம் செய்ய… பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்வதற்கு அருளினாராம் சிவபெருமான். இதனால், திருமெய்ஞானம் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.

திருக்கடையூரில் கங்கா தீர்த்தம்!

மார்க்கண்டேயன், திருக்கடையூரில் சிவபூஜை செய்து வந்த போது, காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகிக்க விரும்பினானாம். அவனுக்காக இந்தத் தலத்துக்கே (பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு அருகே) வந்து சேர்ந்ததாம் கங்கை தீர்த்தம். மார்க்கண்டேயனும் மிகவும் மகிழ்ந்து கங்கை நீரால் இறைவனை அபிஷேகித்து வழிபட்டானாம். அன்று முதல், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரருக்கு இங்கிருந்து அபிஷேக நீர் கொண்டு செல்வது வழக்கமானதாம். வேறு எந்த நீராலும் அபிஷேகிப்பது இல்லையாம்.

ஒருமுறை, பாகுலேயன் எனும் மன்னன், கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்தை அபிஷேகிக்க… லிங்கத்தின் உச்சிப் பகுதியில் வெடிப்பு விழுந்ததாகச் சொல்கின்றனர்.

பங்குனி மாதத்தின் அசுவதி நட்சத்திர நாளில்தான், காசி கங்கா தீர்த்தம், திருக்கடவூர் தலத்துக்கு வந்ததாம்! எனவே இந்த நாளில், இங்கே வந்து இந்த தீர்த்தத்தில் நீராடி, பிரம்மபுரீஸ்வரரை வணங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.

 ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்களை எடுத்துச் சென்று, இந்த ஆலயத்தைப் போலவே ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தை அமைத்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s