தியாகராஜரின் சீடரின் பெருமை

*

அவர் பெயர் ராமராயன். தியாகராஜரின் சீடர்.தினமும் தியாகராஜர் வீட்டிற்குக் காலையிலேயே வந்துவிடுவார்.அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார். அவரது மனைவி கமலாவிற்கும் உதவி செய்வார். தியாகராஜர் ராமரின் முன் அமர்ந்தால் பூஜைக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொடுப்பார். பாடினால் வாங்கிப் பாடுவார். அவரது கீர்த்தனைகளை எழுதி வைத்துக் கொள்வார்.காலையில் உஞ்சவ்ருத்திக்குக் கிளம்பும் தியாகராஜர் நிதானமாகப் பாடிக்கொண்டு உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு சொம்பு நிறைந்ததும் திரும்புவார்.

உள்ளே வந்து அரிசியைக் கொடுத்தானாரால், அதன் பின் வீட்டில் என்ன நடந்தாலும் காதில் வாங்கமாட்டார்.ஒரு சமயம் ராமராயன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு பயந்தபடி வந்தார். தியாகராஜருக்கு சீடனின் நடவடிக்கை வித்தியாசமாகப் பட்டது.என்னாச்சு ராமா..ஒன்னுமில்ல மாமா..சொல்லுப்பா..ஏன் வாட்டமா இருக்க? ஏதானம் கஷ்டமா? ஆத்தில் ஏதவது ப்ரச்சினையா?எங்காத்தில் ஒன்னும் ப்ரச்சினை இல்ல மாமா..பின்ன யாராத்தில் ப்ரச்சினை?சொன்னா என்னை திட்டக்கூடாது.திட்டறதா ? நானா? உன்னையா? நீ எவ்ளோ சமத்து. உன்னை ஏன் நான் திட்டணும்?

சொன்னா கோவப்படுவேள் மாமா.என்னாச்சுன்னு சொல்லுப்பா..ராமாயணம் பாராயணம் பண்ண ஆரம்பிச்சேன்.பேஷாப் படியேன். நல்லதுதானே.. அதுக்கேன் திட்டப்போறேன்?ராவணன் சீதையை தூக்கிண்டு போனதும் நிறுத்தி வெச்சிருக்கேன்.அச்சோ.. ஏன்டா..ராமன் நன்னா காட்டிலேயே அலையட்டும். ஜடாயு வந்து சொன்னாதானே சீதையை ராவணன் தூக்கிண்டு போனது ராமனுக்குத் தெரியும். அந்தக் கட்டம் படிக்கல. ராமன் நன்னா தவிக்கட்டும்.தியாகராஜருக்கு லேசாக கோபம் வந்தது. இருந்தாலும் சீடன் ஏன் அப்படிச் செய்தான் என்று புரியவில்லை. அதனால் கேட்டார்.ஏன் அப்படி பண்ணின?மாமி நாலு நாளா வயத்து வலில அவஸ்தைப் படறா. யார்கிட்டயும் சொல்றதில்ல. நீங்களோ எந்த குடும்ப சிந்தனையும் இல்லாம ராமரைப் பாத்துண்டிருக்கேள். ராமராவது மாமியைப் பாத்துக்கணுமா இல்லியா?

மாமி சொல்லாட்டா என்ன? வலியைப் பொறுத்துண்டு அத்தனை வேலையும் பண்றா. ப்ரசாதம் பண்றா. ராமரை நாலுநாள் காட்டில் அலையவிட்டாத் தான் மாமி படற அவஸ்தையை புரிஞ்சுப்பார்னு, ஜடாயு வர கட்டத்துக்கு முன்னாடி பாராயணத்தை நிறித்திட்டேன்.

நாலுநாளா ராமர் சீதைக்கு என்னாச்சுன்னு தெரியாம தவிச்சிண்டிருக்கார். மாமிக்கு உடம்பு சரியானாதான் மேல படிப்பேன். தப்பார்ந்தா மன்னிச்சிடுங்கோ மாமா. என்றார் ராமராயன்.தியாகராஜர் கண்ணிலிருந்து ஆறாய்க் கண்ணீர் பெருகியது. பாராயணம்தானே, என்னிக்கோ நடந்த கதைதானேன்னு இல்லாம உனக்கு இவ்ளோ நம்பிக்கையா என்று மறுகினார்.தியாகராஜர் அன்று பூஜை செய்து தீர்த்தம் கொடுத்ததும் கமலாம்பாளின் நோவு நீங்கியது.கதைதானே என்றில்லாமல் பாராயணம் துவங்கியதுமே கதையின் ஒரு பாத்திரமாக வாழும் மஹான்கள் நம் தேசத்தில் ஏராளம்.

படித்தது /ரசித்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s