பக்தஜனேஸ்வரர்,

அருள்மிகு மனோன்மணி, (நாவலாம்பிகை), சுந்தர நாயகி, தாயார் உடனுறை பக்தஜனேஸ்வரர், (ஜம்புநாதேசுவர், திருநாவலீசுவரர்)* *திருக்கோவில் திருநாவலூர்,விழுப்புரம் மாவட்டம்.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் இது 8வது தலமாகும்.

அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு வித்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று, நான்கு யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது மிகப் பழமையான கோவில் ஆகும். ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர், ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாமநல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பலகாலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றிக்கொண்டனர். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர் ஆனால் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர் பிழைக்கச் செய்தார். பயந்துபோன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து அவரை விழுங்கிவிட்டார்.

சிவனின் வயிற்றில் பலகாலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து நவகிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ, புன்னியத்திற்கேற்ப்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர்கள் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s