வனபத்திர காளியம்மன் திருக்கோவில்

காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது வனபத்திரகாளியம்மன் கோவில். சாகாவரம் பெற்ற மகிஷாசுரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டு பூஜை செய்து சூரனை அழித்ததாகவும், அம்பாள் சிவனை நினைத்து இந்த வனப்பகுதியில் தியானம் செய்ததால் அம்மன், வனபத்திரகாளியம்மன் என்று பெயர் ஏற்பட்டது. ஆரவல்லி, சூரவல்லி கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி பெண்களை அடக்க பஞ்ச பாண்டவர்களின் ஒருவரான பீமன் சென்று சிறைபட்டு பின்பு கிருஷ்ணன் அவனை காப்பாற்றினார். பின்பு அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர். அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டு சென்று ஆரவல்லி பெண்களின் சாம்ராஜ்யத்தை தவிடுபொடியாக்க அசுரர்கள் பயந்து போய் தங்கள் தங்கையை அல்லிமுத்துக்கு திருமணம் செய்து கொடுத்து அதன் மூலம் விஷம் கொடுத்து கொன்றனர்.

இதையறிந்த அபிமன்யூ வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு நடந்த விசயங்களை கேள்விப்பட்டு வெகுண்டெழுந்து ஆரவல்லி பெண்களை ஆடக்க புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்திரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லி சாம்ராஜ்யத்தை அழித்தொழித்தான் என்பது வரலாறாக பேசப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s