நரம்பில்லா நாக்கு நாலுவிதமாக பேசும் எலும்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் வளையும்…… இரட்டை நாக்கு நேரத்துக்கு ஏற்றபடி மாறி மாறி பேசும்…..நாக்கு பற்றி இப்படி எல்லாம் கூறுவோர் உண்டு.

பேச்சுக்கு அடிப்படையான உறுப்பு நாக்கு. வினாடிக்கு 500 முதல் 2000 வரை ஒலி அலைகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. நிமிடத்துக்கு 160 சொற்களைப் பேசுகிறது. இதனால் தான் சிறந்த பேச்சாளரை நாவன்மை உள்ளவர் என்கின்றனர். நாக்கின் மையப்பகுதிக்கு அமைதி மண்டலம் என்று பெயர். இந்த இடத்தில் பேச்சலையை வெளிப்படுத்தும் சக்தி மிகக் குறைவு. அங்கு சுவை அரும்புகளும் கிடையாது. அதனால் நாக்கின் மையம் சும்மா இருக்கும் சதைப் பகுதிதான். பேச்சு தொண்டைக் குழிக்குள் இருந்து தான் வருகிறது. பேச்சலையை புரட்டி சத்தமாக சொற்களை வெளிவிடும் ஒழுங்கை தான் செய்கிறது நாக்கு. அதன் மற்றொரு உன்னத பண்பு உணவின் அளவை அறிதல். உணவு என்ற உடனேயே அதோடு ஒட்டி வருகிற அறுசுவை என்ற அடைமொழி ஞாபகத்துக்கு வரும்.
இனிப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு கசப்பு கார்ப்பு ஆகிய சுவைகளை கச்சிதமாக பிரித்தறியும் திறன் நாக்குக்கு இல்லை. அதாவது நாக்கில் மட்டும் அறுசுவைகளையும் சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அறிவியல் முடிவின்படி இனிப்பு உவர்ப்பு கார்ப்பு கசப்பு போன்ற சுவைகளை மட்டுமே நாக்கால் அறிந்து உணர முடியும். பின் எப்படி புளிப்பு துவர்ப்பு போன்றவற்றை அறிய முடிகிறது இதற்கென்ரு வாயின் மேல் அண்ணப் பகுதியில் விசேஷ அமைப்பு உள்ளது. இதன் மூலம் இந்த இரு சுவைகளையும் உணர்ந்து கொள்கிறது மூளை
தகவல் நன்றி சிறுவர் மலர்.