இளவரசி டயானா

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கு உலகில் தனித்துவமான இடம் உண்டு.  சரித்திரம் படைத்த கதாநாயகி அவர்.  அவரது இயற்பெயர் பிரான்சஸ் ஸ்பென்சர்  இங்கிலாந்து லண்டன் நோர்போக் பார்க் ஹவுஸில் ஜூலை 1 1961ல் பிறந்தார். தந்தை எட்வர்ட் ஜான் ஸ்பென்சர்.   தாய் பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே.

இசை மீது மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். சிறந்த பியானோ கலைஞராக திகழ்ந்தார்.  ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இன்ஸ்டிடுட் அல்பின் விடெமானட் என்ற கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். லண்டன் கிண்டர் கார்டன் பள்ளியில் குழந்தை பராமரிப்பாளராகவும் சமையல்காரராகவும் பணி புரிந்தார்.  இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு சொந்தமான பார்க் ஹவுஸில் மகாராணியின் செயலரைத்தான் டயானாவின் அக்கா ஜேன் திருமணம் செய்திருந்தார்.  இளவரசர் சார்லசுடன் அதிகாரபூர்வ திருமண நிச்சயதார்த்தம் பிப்ரவரி 24 1981ல் நடந்தது.  நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு 30 ஆயிரம் பவுண்ட்  இன்றைய இந்திய மதிப்பில் 31 லட்சம் ரூபாய்.  அதில் நீலக்கல் சூழ 14 வைரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.  அந்த நாள் முதல் பொது வாழ்வில் முக்கிய புள்ளியாக கருதப்பட்டார் டயானா.

திருமணம் லண்டன் புனித பால் கதீட்ரல் தேவாலயத்தில் ஜூலை 29 1981ல் நடந்தது. இதன் மூலம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த டயானா இங்கிலாந்து இளவரசி ஆனார்.  இத்திருமணத்தை 74 நாடுகளில் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு மூலம் மக்கள் பார்த்தனர்.  திருமணத்தின் போது 25 அடி நீளத்தில் 10 லட்சம் மதிப்பில் உடை அணிந்திருந்தார் டயானா. இந்த உடையில் ஆலயத்தின் முகப்பில் இருந்து உள்ளே செல்ல 3.5 நிமிடங்கள் ஆனது.  மன்னர் குடும்ப கடமைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் டயானா. பள்ளி மருத்துவமனைகளுக்கு என அடிக்கடி விஜயம் மேற்கொண்டார். அது நற்பெயரை பெற்றுத் தந்தது

தனக்கு சொந்தமான 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விற்று கிடைத்த பெருந்தொகையை சேவைகளுக்கு செலவிட்டார். வாழ் நாள் முழுவதும் அன்னை தெரசாவுடன் நெருங்கிய நட்பை பேணினார்.  ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் ஏற்பட்ட சாலைவிபத்தில் ஆகஸ்ட் 31 1997 ல் மரணத்தை தழுவினார். அப்போது அவரது வயது 36  இறுதி ஊர்வலத்தில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.  வாழ் நாளில் டயானா அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள்  எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் கருணை அன்பு செலுத்துங்கள்  உங்களுக்கும் அதேபோல அன்பும் கருணையும் தேடி வரும் என்பதாகும்

தகவல் நன்றி  சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s