அருள்மிகு சவுந்தர்யலட்சுமி தாயார் சமேத கள்வப்பெருமாள் (ஆதிவராகர்) திருக்கோவில்

.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 55 வது திவ்ய தேசமாகும். (இத்தலம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது).வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இர்ப்பதாகவும் தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாக பேசினார். அதோடு விடாமல் மகாவிஷ்ணு “கருமை நிறக் கண்ணாக ” இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அவரோ அகத்தில் இருப்பது தான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவர் கேட்பதாக இல்லை. அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு பாடம் கற்பிக்க எண்ணினார் மகாவிஷ்ணு. பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக்கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டோமோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக என சாபம் கொடுத்துவிட்டார். கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டாள். பூமியில் எங்கு ஒருமுறை தவம் செய்தால் ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ அங்கு சென்று தவம் செய்தால் உனது பாபத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்றார் மகாவிஷ்ணு.

சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றாள். அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி, அரூபமாக தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள். கொஞ்சம், கொஞ்சமாக அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள். தவத்தின் பயனால் முன்னைவிட அழகு மிகுந்தவளாக இருந்த மகாலட்சுமியை பார்க்க வேண்டுமென விஷ்ணுவிற்கு ஆசை எழுந்தது. எனவே அவளை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார். இதனால் இவருக்கு *”கள்ளப்பெருமாள்”* என்ற பெயரும் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பஞ்சதீர்த்தக் கரையில் லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்ததை இவர் ஒளிந்திருந்து கேட்டதால் பார்வதி இவரை *”கள்வன்”* என்று அழைத்ததால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s