நலம் மிக்க தீவு

 உலகமே கொரோனா பெருந்தொற்றின் பிடியில் திணறி மெல்ல விடுபட துவங்கியுள்ளது.  இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி இயல்பு வாழ்க்கை தொடர்கிறது.

இங்கு முக கவசம் கிருமி நாசினி என் எதுவும் பயன்படுத்துவதில்லை.  உணவகம் சுற்றுலா தலங்கள் பள்ளி கல்லூரிகல் இயங்குகின்றன.  திருமணம் உள்ளிட்ட குடும்ப  நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை.  இங்கு ஒருவர் கூட கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் கடைப்பிடிக்கும். கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்த தகவல் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான உடனேயே இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் உள் நாடு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணியர் லட்சத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.  பின் அரசு அதிகாரி பொதுமக்கல் என யாராக இருந்தாலும் லட்சத்தீவுகளுக்குள் வர வேண்டுமானால்  கேரள மானிலம் கொச்சி அரசு மருத்துவ மனையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்னரே லட்சத்தீவுகளின் தலை நகர் கவரட்டிக்கு அழைத்து வரப்படுவர். அங்கு மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப் படுவர்  பின் மீண்டும் பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த பின்பே ஊருக்குள் அனுமதிப்பர்.  இவ்வளவு முன்னெச்சரிக்கை நடைமுறைகள் இருப்பதால் தான் இங்கு ஒருவருக்குக் கூட இதுவரை தொற்று பாதிப்பு ஏற்படவில்லை    நலமிக்க இந்திய தீவு

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s