இளமை பள்ளத்தாக்கு

*

உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும்  ,   ஆரோக்கியமாக    இருப்பதும் இவர்கள் தான்.*

வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் மலைப்பிரதேசத்தில் வாழும் குன்ஸா இன மக்கள், அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வதுடன், வெகு நாட்களுக்கு இளமையுடனும் இருக்கிறார்கள். இவர்களது ஆயுட்காலம் 150 ஆண்டுகளாம். இதில் 70 வயது பெண்கள் இங்கு சாதாரணமாக கர்ப்பம் தரிக்கிறார்கள்; சுகப் பிரசவத்தில் குழந்தைகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் மட்டுமின்றி, உலகநாடுகளில் இருந்தும் குன்ஸா இன பெண்களுக்கு திருமண அழைப்புகள் குவிந்து வருகின்றன. அவர்களை பற்றிய ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்…

பாகிஸ்தானில் உள்ள புருஸீ குன்ஞ்சவாலி பள்ளத்தாக்கு, ‘இளமை பள்ளத்தாக்கு’ எனப் புகழப்படுகிறது. அங்கு வாழும் குன்ஸா இன மக்கள், அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களாக கருதப்படுகிறார் கள்.*உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும், ஆரோக்கியமாக இருப்பதும் இவர்கள் தான்*.இந்த இனத்தில் ஒருவருக்கு கூட புற்றுநோய் வந்தது கிடையாது. சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் குன்ஸா இன மக்கள், பெரும்பாலான உணவுகளை பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், முட்டை, வால்நட் போன்றவை தான் இவர்களது ஆஸ்தான உணவுகள்.ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பள்ளத்தாக்கு பகுதியில் நிலவினாலும், குன்ஸா இன மக்கள் குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்களாம். இந்தப் பழக்கம் அவர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுகிறதாம். மேலும் இப்பகுதி மக்களின் பிரதான உணவான வால்நட்டில் வைட்டமின் ‘பி–17’ அதிகமாக இருப்பதால் புற்றுநோயில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். உணவு பழக்கமின்றி, உடற்பயிற்சிகளும் இவர்களை இளமையாக்குகிறது. ஆம்! குறைந்தது 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கிறார்கள். அத்துடன் ஒரு வருடத்தில் குறைந்தது 2–3 மாதங்களுக்கு உணவை புறக்கணித்து, பழச்சாறுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.

#உங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு பதிவு  செய்யுங்கள் நட்பூக்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s