அல்சரையும் காணோம்,வலியையும் காணோம்

பெரியவாள் வயிற்றில் உருட்டிய,சாத்துக்குடியின் மகிமை.

வேறு ஒரு சங்கரமடத்தைச் சேர்ந்த ஒரு அன்பருக்கு கிடைத்த அற்புதம  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள், ஒரு பேரூந்தில் ஸ்தல யாத்திரை செய்யப் புறப்பட்டார்கள். கன்னியாகுமரி,திருச்செந்தூர்,மதுரை,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போய் விட்டு,காஞ்சிபுரம் வந்தார்கள்காமாட்சி கோயிலில் அபிஷேக நேரம். ஒரு மணி நேரம் போல் காத்திருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. ‘நடை திறப்பதற்குள் சங்கராச்சார்யாரைத் தரிசித்து விட்டு வரலாமே!’ என்று எல்லோரும் புறப்பட்டார்கள்.- ஒரு தம்பதியரைத் தவிர.

அவர், வேறு ஒரு சங்கரமடம் (பீடாதிபதி) சிஷ்யர். அதனால் ஸ்ரீ காஞ்சிப் பெரியவாளைத் தரிசனம் செய்யப் பிரியப்படவில்லை.ஆகவே, காமாட்சி  கோயிலிலேயே தங்கி விட்டார். ஆனால், வெகு நேரமாகியும் ஸ்ரீ மடத்துக்குச் சென்றவர்கள் திரும்பி வராததால், வேறு வழியின்றி அவர்களைத்  தேடிக் கொண்டு ஸ்ரீ மடத்துக்கே வந்து விட்டார்கள்.அவர்கள் வந்த நேரத்தில், ஸ்ரீ பெரியவாள் பூஜை முடிந்து, தீபாராதனை செய்து கொண்டிருந்தார்கள் உத்தராங்க உபசாரங்கள் முடிந்து,பூஜையை நிறைவு செய்து, ஸ்ரீ பெரியவாள் கீழே இறங்கி வந்து, தீர்த்தப் பிரஸாதம் கொடுக்கத் தொடங்கினார்கள்.கடைசியாக அந்த திருவனந்தபுரம் அன்பர் முறை வந்தது.அவருடைய பெயரைக் கூறி, அவருடைய  தகப்பனார், கோத்திரம், அவர்கள் வீட்டின் அமைப்பு, தோட்டம் உட்பட சகல விஷயங்களையும் பெரியவாளே கூறினார்கள்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு சாத்துக்குடியைத் தன் வயிற்றின் மேல் உருட்டிக் கொண்டே இருந்தார்கள்.பெரியவாள்.திருவனந்தபுரத்துக்காரருடன் சுமார் ஒரு மணி நேரம் பேசி விட்டு, பிரஸாதமாக அந்த சாத்துக்குடியைக் கொடுத்தார்கள் பெரியவா.வந்தவருக்கு வயிற்றுப்புண் (பெப்டிக் அல்சர்). மருத்துவர் ஆலோசனைப்படி, அவர் இருபது நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட்டு விட்டுத்  தண்ணீர் குடிக்க வேண்டும்.பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்ததால், ஒரு மணி நேரம் எதுவும்  சாப்பிடவில்லை.பிரஸாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்ததும், அவசரம்,அவசரமாக  பெரியவாள் கொடுத்த சாத்துக்குடியை உரித்துச் சாப்பிட்டார். அதன் பிறகு  அல்சரையும் காணோம், வலியையும் காணோம்.பின்னர் ஸ்ரீமடத்தின் அத்யந்த சிஷ்யர் ஆனார், திருவனந்தபுரத்துக்காரர்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s