கள்ள க்ருஷ்ணன் வெண்ணெய் திருடியதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா என்ன…

ராமாவதாரத்தில் ஏக பத்னி வ்ரதனாகவும், கம்பீர புருஷனாகவும் வாழ்ந்து காட்டினார்.அரசனுக்கு மட்டும் பல திருமணம் அனுமதிக்க பட்டிருந்தும் ஏக பத்னி வ்ரதனாகவே இருந்தார் ராமன். அனைவரிடமும் பேதமில்லாமல் பழகினாலும் அவர் கம்பீரம் அவரிடம் நெருங்க விடாமல் தடுக்குமாம். ஹனுமான் இவரின் கம்பீர தோற்றத்தைக் பார்த்து அவர் அருகில் வந்து கை கூப்பி நின்றார் !

ஹனுமனுக்கே இந்நிலை என்றால் மற்றவர்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? 

கம்பீரத்தை காட்டினால் பக்தன் நெருங்க கூசுகிறான் என்பதால் தனது அடுத்த அவதாரமான க்ருஷ்ணாவதாரத்திலே தன்னை மிகவும் சுலபமாக ஆக்கிக் கொண்டு  அனைவரிடம் சகஜமாக பழகினார்.

இவர் பகவத் கீதையை உபதேசிக்கிற போது கூட  சாரதியாய் கீழே அமர்ந்து கொண்டே சொன்னார்.இதில் நம்மை மெய்மறக்கச் செய்வது இவரது வெண்ணெய் லீலை !!கோகுலத்திலேயே பணக்காரர் நந்தகோபன்……இவர் வீட்டில் இல்லாத வெண்ணெயா ? கண்ணன்  வெண்ணெய் ஏன் திருடினான் ?  அதுவும் கோகுலத்தில் இருந்தவரைதான் இந்த லீலை. அவர் குழந்தையாக இருந்தபோது யாராவது வெண்ணெய் கொடுத்தால்  வேண்டாம் என்று மறுப்பாராம்.கோபியர்கள் வெண்ணெய் எடுத்து, அதை மதுராவிற்கு கொண்டு போய் வியாபாரம் செய்வார்களாம்..  இவர்கள் தயாரிக்கும் வெண்ணெய் வெண்மையாக இருக்கும் மிருதுவாக இருக்கும்கொஞ்சம் வெய்யில் பட்டாலும் இளகிவிடும்

இப்படிப்பட்ட வெண்ணெயை அவர்கள் வீட்டில் உயரத்தில் ஒளித்து வைப்பர். கண்ணன் யாருமில்லாத சமயம் மெதுவாக சென்று ஒளித்து வைத்த இடத்தை கண்டுபிடித்து வெண்ணெயை சாப்பிட்டு பானையை உடைத்து விட்டு சிரிப்பானாம்.இந்த லீலை விளையாட்டுப்போல் இருந்தாலும், பகவான் செய்யும் லீலைகளில் காரணம் இருக்குமே !க்ருஷ்ண பக்தன்,  தன் பக்தியை வெளிக்காட்டாமல் உலகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துக் கொள்வான்.  உலக விஷயத்தில் நாட்டமில்லாமல் ‘ க்ருஷ்ண பக்தியே லட்சியம் ‘ என்றிருப்பான்.அவன் மனம் ம்ருதுவானதாக இருக்கும்.க்ருஷ்ணா என்ற சொல்லை கேட்டாலே மனம இளகி விடும்.மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பான்.இப்படி வாழும் மஹாத்மாக்களை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ பகவான் கவனிக்கிறார்….இப்படிப்பட்ட ஞானிகளுக்கு தானே வலியச் சென்று தன்னை வெளிக் காட்டுகிறான். ‘ ஒளிந்து இருக்கவே ஆசைப்படும் தன் பக்தனை வெளிக் காட்டுகிறான் . உதாரணம்., மீரா, சூர்தாஸ், ஆழ்வார்கள் ,  சைதன்யர் போன்றோர் !!வெண்ணெய் திருடிய லீலையில் இந்த ரகசியத்தை காட்டினான் நம் க்ருஷ்ணன்…உயரத்தில் வைத்த வெண்ணெயைப் போல் நம் பக்தியை உயர்வான க்ருஷ்ணரிடம் வைத்தோம் என்றால்..,ஒளித்து வைக்கப் பட்ட வெண்ணெய் போல் நம் க்ருஷ்ண  பக்தியை ரகசியமாக வைத்துக் கொண்டோம் என்றால்…வெண்ணெயைப் போல் நாமும் தூய்மையாக இருந்தால்..துளி வெய்யில் பட்டாலும் உருகி விடும் வெண்ணெயைப் போல், நம் இதயமும் அவன் நாமத்தை கேட்டவுடன் உருகுமேயானால்…

மிருதுவாக இருக்கும் வெண்ணெயை போல் நம் குணமும் ம்ருது வாக இருக்கும் என்றால்…ஸ்ரீக்ருஷ்ணனே வந்து, அந்த வெண்ணெய் போன்ற நம் மனதை உண்டு, பானையை உடைப்பது போல் இந்த பிறவிக் கடலை உடைத்து வைகுண்ட வாசலை திறந்து விடுவார் !!நாம் க்ருஷ்ணருக்கு வெண்ணெயை கொடுக்கும் போது ‘ அழுக்காகவுள்ள இந்த மனதை இந்த வெண்ணெயை போல் தூய்மையாகவும், மிருதுவாகவும் ஆக்கு’ என்று ப்ரார்திக்க வேண்டும்.  மகான்கள் போல் நாமும் நமக்கு இருக்கும் சிறு பக்தியை வெளிக்காட்டாமல் ஒளித்து வைத்துக் வைத்துக் கொண்டு , க்ருஷ்ண பக்தியே லட்சியமாக கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும்.இப்படி இருந்தால் எளிதில் அவனது அருளைப் பெறலாம்..க்ருஷ்ணன் சுலபன்,  அவன் கதை கேட்பது சுலபம் , அவன் பக்தியும் சுலபம் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s