பூவையின் துயர் தீர பூக்கொடுத்த புனிதர்”

(பெரியவா பூஜை செய்த செம்பருத்தி மகிமை)  

காஞ்சி மகான் பல வருடங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தங்கி ‘சந்திரமௌளீஸ்வரர்; பூஜையை செய்திருக்கிறார்கள்.  அந்த சமயத்தில் சாத்தனூரில் வியாச பூஜை செய்து தொடர்ந்து சாதுர்மாஸ்ய விரதமாக இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்.   அப்போது ஒரு மேடையில் வேதவியாசர் முதலான அறுபத்து ஏழு பீடாதிபதிகளையும் முனை முறியாத அட்சதை (அரிசி), மற்றும் எலுமிச்சம் பழத்தில் எழுந்தருளச் செய்து, அதன் முன்பாக அமர்ந்து மகாபெரியவா பூஜை செய்தார்.அதனால், அவரை தரிசிக்க வரும் குழந்தைகள் பலரும் முனை ஒடியாத அட்சதையை தயாரித்து பூஜைக்கு கொண்டுவந்து கொடுப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டு குங்குமமும்,காமாக்ஷி அம்மன் பொறித்த வெள்ளிக்காசும் பிரசாதமாகக் கொடுப்பார் மகான். அந்த வெள்ளிக்காசைப் பெற்றுக்கொண்டு குழந்தைகள் அடையும் சந்தோஷம் அளவிட முடியாதது.

அந்த சமயத்தில் ஒருநாள், நடுத்தர வயதைக் கடந்த ஒரு தம்பதியர், சுமார் பதினெட்டு வயதுள்ள தங்கள் மகளோடு மகானை தரிசிக்க வந்தார்கள் மகான் முன்னிலையில் வந்த பின்னும், எதுவும் சொல்லாமல், அவர்கள் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்த மகான், அந்த அம்மாளிடம் என்ன பிரச்னை என்பது போல் சைகையில் கேட்டார்.   அந்தப் பெண்மணி, “எங்கள் மகளுக்கு பதின்மூன்று வயதில் திருமணம் செய்து விட்டோம். பெரிய மனுஷிஆனதும் புருஷன் வீட்டில் கொண்டுவிட நினைத்திருந்தோம். ஐந்தாறு வருஷங்கள் ஆகியும்,இவள் இன்னும் பெரியவள் ஆகவில்லை!” என்று மிகுந்த துக்கத்துடன் சொன்னார்    மேலும் மாப்பிள்ளை வீட்டில் வேறு கல்யாணம் செய்ய வக்கீலைப் . பார்ப்பதாக கேள்விப் படுவதாகவும் சொல்லி வருந்தினார்கள்     அந்தத் தம்பதியர்.அமைதியாகக் கேட்டுக்கொண்ட பெரியவா, ” இரண்டு நாள் தங்கி சந்திரமௌளீஸ்வரர் பூஜையை தரிசனம் செய்து தீர்த்தப் பிரசாதம் வாங்கிண்டு செல்லுங்கள். நல்லதே நடக்கும்..” என்று சொன்னார்.

அப்படியே அவர்களும் இரு தினங்கள் இருந்து பூஜைகளை தரிசித்துவிட்டு, மூன்றாவது நாள் மகானிடம் வந்து, ஊருக்குக் கிளம்ப உத்தரவு வாங்கிக் கொள்வதாகிக் கூறி நமஸ்காரம் செய்தார்கள்   .பெரியவா மௌனமாக ஆசிர்வதித்தார். பிறகு பூஜையிலிருந்த ஒரு செம்பருத்திப் பூவை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

“இதை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடு! தொடர்ந்து இதுபோல் பன்னிரண்டு நாட்கள் சுவாமிக்கு வைத்த புஷ்பத்தை சாப்பிடு” என்று சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார்.    என்ன ஆச்சரியம்; எத்தனையோ மருத்துவம் செய்தும்,பூப்பு அடையாத அந்தப் பூவை (பெண்), மகான் சொன்னபடி செம்பருத்திப் பூவை சாப்பிடத் தொடங்கிய ஐந்தாவது நாளே பெரிய மனுஷி ஆகிவிட்டாள்.    மகிழ்ந்த அவளது பெற்றோர், மகளுக்கு ‘மங்களஸ்னானம்’ ஆனதும் முதல் வேலையாக மகானை தரிசிக்க வந்தார்கள். தங்களால் இயன்ற பழங்கள், மலர்களைத் தந்தார்கள். தங்கள் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டதை, அவளது கணவன் வீட்டாருக்குச் சொல்லிவிட்டதாகவும், அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதற்கு முன் மகானிடம் சொல்லி ஆசிபெற வந்திருப்பதாகவும் கூறினார்கள்

தங்கள் மகளின் வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்னையைத் தீர்த்துவைத்ததற்கு .நன்றி என்று கண்ணீர்மல்கச் சொல்லி மகானை நமஸ்கரிதார்கள்  “எல்லாம் அந்தப் பெண்ணோட பூர்வ ஜன்ம புண்ணியம்.இதுல எனக்கு என்ன பெருமை இருக்கு” எல்லாம் செய்துவிட்டு தான் எதுவும் செய்யவில்லை என்பது போல் அமைதியாகச் சொன்னார்.பெரியவா,

‘பூ தந்து புனிதம் நடத்திய புண்ணியர்

நன்றி- குமுதம் லைஃப்

(நேற்று வந்தது)06-11-2019)  மன்னை ஜீ நீலா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s