
1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை மிஞ்சிய அதிசயம். பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை.

நேபால் தலை நகர் காட்மாண்டுவிலிருந்து கிட்டத்தட்ட 9 கிமீ தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில் இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொடிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கிட்டத்தட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராயச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னர் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்த வண்ணமே உள்ளன.