அவன் நினைவே வாழ்வு

கையில் ஒரு லட்சம் பணம் கிடைத்தால் நாம் என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம். படித்து பெரிய பதவியில் இருந்து எல்லாம் இறைவன் கொடுத்தது என்று அவன் நினைவே வாழ்வு என்று இருக்கும் தம்பதியர்களை பார்த்தால் கண்களில் நீர் கட்டுகிறது. Height of bhakthi and humbleness. படியுங்கள் புரியும்.

 ·

மராத்தியில் திவாகர் என்பவர் எழுதிய பதிவு ஆகாஷ் ரெட்டி என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவிட்டு இருந்ததை என்னுடைய தாழ்மையான முயற்சியில் தமிழ் பதிவாக … !

நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு வயதான தம்பதியரை நான் சந்தித்தேன். 

அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக தெரிந்தார்கள், அவர்களுக்கு சில உதவிகள் தேவைப்பட்டது போல் தெரிந்தது … 

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, அவர்களுக்கு உணவு வேண்டுமோ என்று நினைத்து நான் ஒரு நூறு ரூபாய் நோட்டை வழங்கினேன் … ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். 

நான் மேலும் விசாரித்தபோது, ​​அவர்கள் தங்கள் கதையை பின்வருமாறு விவரித்தனர். 

அவர்கள் கடந்த 3 மாதங்களில் 2200 K M பயணத்தை முடித்திருந்தனர், மேலும் ஒரு மாதமாக நடந்தே துவாரகாவுக்கு திரும்புகின்றனர். 

அவர் குழந்தையாக இருந்தபோது, ​​அவரது இரு கண்களின் பார்வையையும் இழந்துவிட்டார் என்றும், அவர்கள் மருத்துவரிடம் சென்றபோது, ​​சிறந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரால் கூட கண்பார்வையை மீட்டெடுக்க எதுவும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதாகவும் அந்த மனிதர் கூறினார். 

ஆனால் சர்வவல்லமையுள்ள கடவுள் மீது நம்பிக்கை இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறும் மீதியை விதி வசத்துக்கு விட்டுவிடுமாறும் அவரது தாயார் மருத்துவரை வலியுறுத்தினார். 

தெய்வத்தின் அருளால் கண்பார்வை மீட்டெடுக்கப்பட்டால், தனது மகனை பண்டார்பூர் மற்றும் பாலாஜி (திருப்பதிக்கு) கால்நடையாக ஒரு யாத்திரை அனுப்புவதாகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். 

அதன்படி அவர்கள் இப்போது துவாரகாவுக்கு செல்லும் யாத்திரை மேற்கொண்டனர். அந்த பெண்மணியும் ஏன் அவருடன் இருக்கிறார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன், அவருடைய பதிலைக் கண்டு திகைத்துப் போனேன். அவர் தன் கணவன் தனியாக செல்வதை விரும்பவில்லை, எனவே அவர் உடன் வந்து உணவு மற்றும் சிற்றுண்டிகளை தயார் செய்து பயணத்தை சுவாரஸ்யமாக வைத்திருப்பதற்கு உதவுவதாக கூறினார். 

மேலும் அவர்கள் 25% இந்தி மற்றும் 75% ஆங்கிலம் பேசுவதால் ஆர்வத்துடன் அவர்களின் கல்வி பற்றி கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்தப் பெரியவர் வானியற்பியலில் பி.எச்.டி. பட்டம் பெற்று இருந்தார், லண்டனில் 7 ஆண்டுகள் ஒரு பல்கலைக்கழகத்தில் வேலையில் இருந்துள்ளார் … 

மேலும் சி.ரங்கராஜன், கல்பனா சாவ்லாவுடன் பணிபுரிந்து இருக்கிறார். அவரது மனைவி லண்டனில் இருந்து மனித உளவியலில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார் …

அவர்களின் முகங்களில் படித்ததற்கான எந்த தடயமும் இல்லை. அவர் கடவுளிடம் தனது தாய் செய்திருந்த வேண்டுதலை  நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தம்பதியினரின் ஓய்வூதியங்கள் கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்படுவதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். 

இந்த நடையில் சென்றால் ஒரு மாதத்திற்குப் பிறகு துவாரகாவை அடையலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

பெரியவரின் பெயர் டாக்டர் தேவ் உபாத்யாயா மற்றும் அவரது மனைவி பெயர் டாக்டர் சரோஜ் உபாத்யாயா.

நன்றிகள் Kgs Kannan 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s