பெண் கல்வியில் புரட்சி ஏற்படுத்திய தாய்

சாவித்ரிபாய் புலே இந்தியாவில் சிறுமியருக்கு கல்வி புகட்டிய முதல் பெண் ஆசிரியர். தற்போதைய மகாராஷ்டிர மானிலம் உள்ள பகுதியில் கல்வி வாய்ப்பற்ற குடும்பத்தில் ஜனவரி 3 1831ல் பிறந்தார்.  ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய தீரர். மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேயை மண்ந்தார். அவர் கொடுத்த உற்சாகத்தால் கல்வி பயின்று சாதனைகள் படைத்தார்.

எளியவர்களுக்கு கல்வி புகட்ட ஒரு பள்ளியை துவங்கினார் ஜோதிபா அதில் கற்பிக்கும் பணியை \ஏற்றார் சாவித்ரி  அந்த பணிக்கு சென்ற போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. மிகவும் கண்ணியமாக எதிர்ப்பாளர்களை வென்றார்.  சகிப்பும் கருணைமனமும் அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன.  பெண்களுக்கு கல்வி புகட்ட ஒரு பள்ளியை மகாராஷ்டிரா மானிலம் புனே அருகே 1848ல் துவங்கினார்.  மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவியர் அதில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி புகட்டினார்.  அப்போது ஏற்பட்ட முரட்டுத் தனமாக எதிர்ப்புக்களை சமாளித்தார்.  கற்பிக்க சென்ற சாவித்ரி மீது மலம் வீசப்பட்டது. அதை மிகவும் நுட்பமாக எதிர்கொண்டார்.  மாற்றுடை ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பார்.  எதிர்ர்ப்பாளர்கள் வீச்சால் நாசமாகும் உடையை வகுப்பறைக்கு சென்றதும் மாற்றி புதிய உடையை அணிந்து பாடம் நடத்துவார். எதிர்த்தவர் எண்ணத்தை இவ்வாறு தவிடு பொடியாக்கினார்.

மகாராஷ்டிராவில் 1876 ல் பெரும் பஞ்சம் நிலவியது.  உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர் மக்கள்.  பட்டினியைப் போக்க கடுமையாக உழைத்தார் சாவித்ரி. துயரம் தீர்க்க அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இலவச உணவுத் திட்டத்தை. அமல்படுத்தினார். பசிப்பிணியை போக்க அரும்பாடுபட்டார்.  விதவை பெண்களுக்கு உதவும் வகையில் பாலஹத்திய பிரதிபந்தக் கிருஹா என்ற இல்லத்தைத் துவக்கினார்.  அது வெற்றிகரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தந்தது.

சாவித்ரியிடம் கற்ற மாணவி முக்தாபாய் ஒரு கவிதை எழுதினார்  அது தியானோதயா இதழில் மங்குகள் மகர்களின் துக்கம் என்ற தலைப்பில் பிரசுரமானது.  சாவித்ரிபாயின் பணி அந்த கால சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அந்த கவிதை வெளிப்படுத்தியது.  கொடிய தொற்றான பிளேக் நோய் தாக்கம் மகாராஷ்டிராவில் 1897ல் அதிகமாக இருந்தது. தொற்று பரவலைத் தடுக்க கடும் சட்டங்களை அமல்படுத்தியது ஆங்கிலேய அரசு.  பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டனர். அவற்றி எல்லாம் தாண்டி மக்களுக்கு உதவினார் சாவித்ரி.

அவரது வளர்ப்பு மகன் டாக்டர் யெஸ்வந்த் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.  விடுமுறையில் வீடு திரும்பியவரை ஒரு மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்ரி.  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.  கொடிய பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தான் சிறுவன் பாண்டுரங் பாபாஜி. அவனை மருத்துவமனைக்கு தூக்கி வந்தபோது சாவித்ரிக்கு நோய் தொற்றியது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவர் தூக்கி வந்த சிறுவன் பிழைத்தான்  வாழ்க்கையை  சேவையால் நிறைத்தவர் சாவித்ரிபாய். இந்திய பெண் கல்வியின் தடைகளை தகர்த்த தாய் என போற்றப்படுகிறார்.  சிறந்த ஆசிரியருக்கான விருதை 1852ல் ஆங்கிலேய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மத்திய அரசு இவர் நினைவாக 1998ல் தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s