பார்த்தாலே பரவசம்

ஒரு முறை முருகபக்தரான சாண்டோ சின்னப்பதேவர் தெய்வம் என்னும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார்.  புராணத் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் காலம் அது.  தெய்வம் படம் ஊரெல்லாம் சக்கைப்போடு போட்டது. அறுபடை வீட்டு முருகன் கோயில்களில் நடக்கும் திருவிழா முருகனின் திருவிளையாடல்கள் மற்றும் ஆறுபடை வீடுகளிலுள்ள தெய்வத் திருமேனிகளை தத்ரூபமாக வடிவமைத்து படமாக்கியிருந்தார் தேவர்.

பார்த்தவர்கள் பக்திப்பரவசம் கொண்டனர்.  முருகன் திரையில் தோன்றும் நேரமெல்லாம் கண்கள் பனிக்க கன்னத்தில் இட்டுக் கொண்டனர்.  சிலர் கற்பூரம் காட்டி ஆராதித்தனர்.  இந்த தகவல்கல் காஞ்சிப்பெரியவரின் காதுக்கும் போகவே பட்த்தை பார்த்த பக்தர்களை அழைத்து விபரம் அறிந்தார்.  அவரது மனதில் ஓர் எண்னம் உதித்தது. அது ஒரு ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதக்காலம்.  காஞ்சிபுரம் குமரக்கஒட்டம் முருகன் கோயிலில் சஷ்டி விழா தொடங்கியது. 

காஞ்சிபுரம் பக்தர்கள் ஆறுபடை முருகன் கோயிலுக்கு போயிருப்பார்களா என்ன? இவர்களில் எத்தனை பேர் ஏழைகளாக இருப்பார்கள்……………… அவர்களுக்கு குமரக்கோட்டம் குமரன் தான் எல்லாம்.  எனவே கந்தசஷ்டிக்கு குமரக்கோட்டம்  முருகனைத் தரிசிக்க வருவோருக்கு ஆந்த அதிர்ச்சி தர வேண்டும் என தீர்மானித்தார்.  எப்படி தெரியுமா?  தெய்வம் படத்தில் உலா வந்த அறுபடைவீட்டு முருகனின் திருமேனிகளை எடுத்து வந்து அலங்காரமாக அமைக்க விரும்பினார்.  சின்னப்பதேவரை சந்திக்க சென்னைக்கு ஆள் அனுப்பினார்.  மருதமலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேவர் மடத்தின் ஊழியரைக் கண்டு மனம் பூரித்தார்.  கைகளைக் கூப்பி காஞ்சிப்பெரியவரை வழிபட்டு நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். எல்லாவற்றையும் விவரமாக எடுத்து சொன்னார் ஊழியர்.

தெய்வமே எனக்கு அளித்த பேறு இது. வாகினி ஸ்டூடியோவில் தான் முருகன் சிலைகள் உள்ளன  உடனே ஆள் அனுப்பி லாரியில் காஞ்சிபுரம் அனுப்புகிறேன் என மனம் நெகிழ்ந்தார் தேவர்.  பிறகென்ன…………… தேவர் அனுப்பிய பணியாளர்கள் படத்தில் எப்படி அமைத்தார்களோ அது போல முருகன் சன்னதிகளை தத்ரூபமாக அமைத்தனர்.  குமரகோட்டத்தில் அறுபடை வீட்டு முருகனையும் பரவத்துடன் தரிசித்த பக்தர்கள் மனம் நெகிழ்ந்தனர்.  காணிக்கைகளை வாரி வழங்கினர். அப்பணத்தில் அன்னதானம் அளிக்க உத்தரவிட்டார் காஞ்சிப்பெரியவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s