விட்டலன் அருள் புரியும் தென்னாங்கூர்

சிறப்புகள்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாக இத்திருக்கோயில் உள்ளது.

 பாண்டுரங்கப் பெருமாள் ரகுமாயீ தாயார் உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பாண்டுரங்க சுவாமி சுமார் 12 அடி உயர சாளக்கிராமத்தினால் நின்ற கோலத்தில் உள்ளார். இத்திருக்கோயிலின் கோபுர அமைப்பானது ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜகந்நாதர் கோயில் கோபுரத்தினைப் போன்று சுமார் 120 அடி உயரத்தில் உள்ளது. 

இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் “மஹாசோடஷி’ என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். 

ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான “மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. 

இங்கு தான் கோவிந்தராஜப்பெருமாள் திருப்பதியைப்போல், சனிக்கிழமைதவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்புரிகிறார். 

இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது. 

இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படும் முறை இத்திருத்தலத்தின் சிறப்புகளுள் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் “விஷுக்கனி உற்சவம்’ என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

 கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது. இது தவிர ராஜகோபாலனாக, கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக, கீதை உபதேசிக்கும் கண்ணனாக, தேரோட்டும் பார்த்தசாரதியாக, ராதாகிருஷ்ணனாக சேவை சாதிக்கிறார்.

அலங்கார திருக்கோலம்

ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாத தரிசனத்திற்காக மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் அலங்காரத்திலும் திவ்யமாக காட்சியளிக்கிறார்.

பலன்கள்

தொழில் வளர்ச்சி,குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பலர் வருகின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு புது வஸ்திரம் காணிக்கையாக வழங்குகின்றனர்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 36கி.மீ தொலைவிலும் வந்தவாசியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.உத்திரமேரூரிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.

*தொகுப்பு* :

*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s