சாரங்கபாணி கோவில்

கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோவில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் எழுந்தருளி உள்ளது. இவரின் தாயார் கோமளவல்லி ஆவார். இந்த ஊருக்கு திருக்குடந்தை என்னும் புராண பெயர் வைத்தும் அழைக்கின்றனர்.

*சாரங்கபாணி கோவிலின் சிறப்பு

சாரங்கபாணி பெருமாளின் மங்களாசாசனத்தை பெற்றுள்ளார். இவர் 108 திவ்ய தேசங்களில் இது 12 -வது திவ்விய தேசமாகும்.

இந்த சாரங்கபாணி கோவில் பெருமாள் வைதிக விமானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை.

*கோவில் அமைப்பு :*

சாரங்கபாணி கோமளவல்லி மற்றும் மஹாலக்ஷ்மியுடன் கோவிலில் அருள் புரிகிறார். சாரங்கபாணி நாவினில் பிரம்மனுடன், தலையில் சூரியனுடன் காட்சி தருகிறார். இந்த கோவில் முழுவதும் நரசிம்ம அவதாரம் பெற்ற சிலைகள் மிகவும் கலை நயமாக செதுக்கப்பட்டு உள்ளது.

சாரங்கபாணி தாயாரை மணந்துக்கொள்ள தேரில் வந்தமையால் இந்த திருத்தலமும் தேரின் வடிவில் தோன்றியது. கோவில் தேரின் இருபுறமும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் தேரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேரானது 11 நிலைகளையும், 150 அடிகளையும் கொண்டு சிறப்பாக விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை தேர் எனும் விழா சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த தேரினுடைய அமைப்பை புகழ்ந்து பாடியவர் திருமங்கை ஆழ்வார். ஆழ்வார் பாடிய பாடலை “ரதபந்தம்” என்னும் வேறு பெயரால் அழைக்கப்படுகிறது.

*சாரங்கபாணி கோவில் தல வரலாறு :*

ஒரு சமயத்தில் வைகுண்டம் சென்ற மகரிஷி திருமால் குணத்தை  சோதனை செய்ய மகரிஷி திருமாலின் மார்பை நோக்கி உதைக்க சென்றார். இதனை திருமால் தடுக்காமல் ஏற்றுக்கொண்டார். இதனால் திருமாலின் மனைவி உங்கள் மார்பில் நான் இருந்தும் பிற மனைவிக்கு சொந்தமான பாதத்தை பட அனுமதித்ததால் திருமாலின் மனைவி கோவம் பட்டு திருமாலிடம் இருந்து விலகி சென்றாள்.

மகரிஷி பின்பு தான் செய்த தவறை உணர்ந்து திருமால் மற்றும் மனைவி லக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்டார். தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை தேவர்கள் அனைவரும் மகரிஷியிடம் கொடுத்தனர். மகரிஷி லக்ஷ்மியிடம் இதற்காக தான் உன் கணவனை நான் மார்பில் உதைக்க நேரிட்டது என்றார்.

மகரிஷி மனம் மாறி லட்சுமியிடம் லோகத்தின் தாயாகிய உனக்கு நான் தந்தையாகவும், நீ எனக்கு மகள் முறையாகவும் பிறக்க வேண்டும் என்று மஹரிஷி கூறினார். இதை கேட்டதும் லக்ஷ்மி மனம் உருகி போய் மகரிஷியை ஆசிர்வதித்தாள். லட்சுமி கூறிய சபதம் படி மகரிஷி திருமாலை பிரிந்து இருப்பதாகவும், பூலோகத்தில் மஹரிஷியின் மகளாக பிறப்பதற்கு தவம் இருக்கவேண்டும் என்று லக்ஷ்மி கூறினாள்.

அதன் பிறகு கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணி திருக்கோவிலில் மகரிஷி தவத்தினை கடைபிடித்தார். இந்த கோவிலின் தீர்த்தமான ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லக்ஷ்மி வீற்றிருந்தாள்.  லக்ஷ்மிக்கு கோமளவல்லி என்னும் வேறு பெயரும் இட்டு திருமாலுக்கு மணம் முடித்தனர். சாரங்கபாணி “பெருமாள் சார்ங்கம்” எனும் வில்லேந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி என்னும் பெயரால் இவர் அழைக்கப்பட்டார். கும்பகோணத்தை தாயாரின் அவதார ஸ்தலம் என்னும் சிறப்புமிக்க கூறுகிறார்கள்.

*நடைபெறும் திருவிழாக்கள்

இந்த கோவிலில் வருடா வருடம் சித்திரை திருவிழா, தை மாதத்தில் வரும் சங்கரமண உற்சவம், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம், மாசியில் மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

வேண்டியது நிறைவேற:

கோவிலின் முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள் தருகிறார். கோவிலுக்கு செல்லும் முன் இவரை வேண்டிட்டு சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது முன்னோர்களின் ஐதீகமாக கூறப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

கோவிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி பக்தர்கள் அனைவரும் பெருமாளை வணங்கி வருகின்றனர். கும்பகோணத்தில் தோன்றியிருக்கும் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய்யினால் செய்த பொருள்களை வைத்து பெருமாளுக்கு பக்தர்கள் வேண்டிய காரியம் நிறைவேறிய பிறகு இந்த பொருள்களால் நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.

நன்றி.   ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s