தசாவதார கிருஷ்ணர்

 குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள்.  இதனால் குடும்பம் படும் பாட்டை சொல்லி மாளாது.  மது அருந்துவோரை திருத்தி நல்வாழ்வு தரும் தலமாக ஆந்திர மானிலம் வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் கோயில் உள்ளது.  இங்குள்ள தசாவதார கிருஷ்ணர் சிலை சிறப்பு மிக்கது. 

750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராயந்தபோது வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம்  சுவாமிக்கு நித்ய பூஜை  அபிஷேகம்  ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும்.  கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும் என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத் தொடங்கினர்.

கோயிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர்   விஜயரைத் தரிசிக்கலாம்  கோயில் விமானத்தில் கலியுக கண்ணன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் இங்குள்ள தசாவதார குளத்தின் தீர்த்தம் இனிப்பாக உள்ளது. குளத்தின் நடுவே காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணர் சிற்பம் உள்லது. குளத்திங்கரையில் 21 அடி உயர ஒரே கல்லால் ஆன தசாவதாரக் கிருஷ்ணர் சிலை உள்ளது.  மச்சம் கூர்மம் வராகம் நரசிம்மம் வாமனம் பரசுராம் ராமர் பலராமர் கிருஷ்னர் கல்கி என்னும் மகாவிஷ்ணுவின் தசாவதாரமும் ஒரே சிலையிலும் வடிக்கப்பட்டுள்ளன.  கோயிலின் தென்புறத்தில் அஷ்ட லட்சுமி சன்னதி உள்ளது. மது அருந்துபவர்கள் இங்கு விளக்கேற்றி வழிபட்டால் மனம் திருந்தி வாழ்வர்   செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் ராகுகால பூஜையில் பங்கேற்றால் சுப விஷயத்தில் குறுக்கிடும் தடைகள் விலகும். மகாலட்சுமியை மடி மீது அமர வைத்த நிலையில் லட்சுமி நாராயணரை தரிசிக்க பக்தர்கள் தவம் செய்திருக்க வேண்டும். இவரை தரிசித்தால் நல்ல மணவாழ்க்கை அமையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

எப்படி செல்வது

சித்தூரில் இருந்து 15 கிமீ திருப்பதியில் இருந்து 60 கிமீ  வேலூரில் இருந்து 45 கிமீ

விசேஷ நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி   வைகுண்ட ஏகாதசி   ஸ்ரீ ராம நவமி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s