தேவியருடன் சூரிய நாராயணர்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் மூலவராக சூரிய நாராயணர் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்.  முனிவரான காலவருக்கு தொழு நோய் ஏற்பட்டது.  நவக்கிரகங்களை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதோடு நலத்துடன் வாழும் வரத்தையும் பெற்றார். இதையறிந்த பிரம்மா நவக்கிரகங்களே  சிவனின் ஆணைப்படி எலா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலனை மட்டும் வழங்கக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால் முனிவருக்கு வரம் தரும் அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டீர்கள். முனிவருக்கு வந்த தொழு நோய் உங்களுக்கு வரட்டும் எனச் சாபமிட்டார்.

இதிலிருந்து விமோசனம் பெற பூலோகத்திலுள்ல எருக்கு வனம் ஒன்றில் தங்கி சிவனை பூஜித்தனர்.  காட்சியளித்த சிவன் நோயைப் போக்கியதோடு இத்தலத்திலேயே தங்கி அருள்புரிய ஆணையிட்டார். இதனடிபடையில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டது. இங்கு சூரியன் மூலவராக இருப்பதால் சூரியனார் கோயில் என பெயர் பெற்றது.

இந்தியாவில் இரு இடங்களில் சூரியக்கோயில் உள்ளது.  ஒடிசாவிலுள்ள கோனார்க் தமிழத்தில் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில்   கோனார்க்கில் வழிபாடு இல்லை. ஆனால் சூரியனார் கோவிலில் மூலவராக மேற்கு  நோக்கி நிற்கும் உஷா பிரத்யுஷா தேவியுடன் திருமணக் கோலத்தில் இருக்கிறார். செந்தாமரை மலர்கள் ஏந்திய இவரை சூரிய நாராயணர் என்றும் அழைக்கின்றனர். குதிரை வாகனமாக உள்ளது.  சூரியனின் உக்கிரத்தை போக்கும் விதமாக எதிரில் குருபகவான் இருக்கிறார்.

ஞாயிறன்று விரதமிருந்து சுவாமியை தரிசிப்பது நல்லது.  தொடர்ந்து 12 ஞாயிற்ருக்கிழமை தரிசித்தால் கிரகதோஷம் நீங்கும்.  இங்கு தரிசிப்பவர்கள் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராண நாதர் மங்கள நாயகியையும் வழிபடுகின்றனர்.  சூரிய திசை சூரிய புத்தி நடப்பவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

எப்படி செல்வது

கும்பகோணத்தில் இருந்து 24 கிமீ

விசேஷ நாட்கள்

பொங்கல்   ரதசப்தமி உற்சவம் ஆடி கடைசி செவ்வாய் ஆவணி ஞாயிறு  கார்த்திகை சோமவாரம்  தை அஷ்டமி  மாசி சிவராத்திரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s