சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும். நம் உரிமையாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை கண்ணின் இமை போல் காக்கிறார் என்று விளக்கும் எளிய கதை

ஒரு மாடு மேய்ச்சலுக்காக வழி தவறி  ஒரு காட்டுக்குள் சென்று விட்டது.   மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது. மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது. ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது. புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது புலி சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தனர். இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது, *மாடு* : உனக்கு உரிமையாளர் இருக்கிறாரா? *புலி* : நானே காட்டின்  ராஜா. நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின் உரிமையாளன். என்றது ஆணவமாக….. *மாடு* : ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க. *புலி* : நீயும் தான் என்ன போல சாகப்போற. உங்கிட்ட உரிமையாளர் இருந்தாலும் உன் நிலை என்னுடையது போலவே தான் இருக்கு.

 *மாடு* : இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டிற்கு வந்து என்னை தேடி பார்ப்பர், அவர் நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த மண்ணிலிருந்து வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உன்னை யார் வந்து அழைத்துச் செல்வார்கள்?

சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.செல்லும்முன், மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியாது, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவே அமையலாம்.

மாடு – மனத்தாழ்மையுள்ள நம் இதயத்தின் சின்னம்.

புலி – இறுமாப்புள்ள நம் மனம்.

உரிமையாளர் – கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் 

குளம் – இந்த உலகம்.

 நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும். நம் உரிமையாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை கண்ணின் இமை போல் காக்கிறார் என்று நம்பிக்கை கொள்வோம்.. நம்மை அவருடன் அழைத்து செல்ல….

 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s