முதல் யுகத்தில் எழுந்த கோயில்

கர்னாடக மானிலம் கோலார் மாவட்டம்  முல்பாகல் அருகிலுள்ள குருடு மலையில் லட்சுமி கணபதி கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை முதல் யுகமான கிருத யுகத்தில் மும்மூர்த்திகளால் [ பிரம்மா விஷ்ணு சிவன் ] உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் இங்கு வழிபாடு இல்லாமல் இருந்தது. ஒரு நாள் விஜய நகர் மன்னரான கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றிய வினாயகர் குர்டு மலையில் தான் இருப்பதாகவும் அங்கு கோயில் கட்டுமாறும் உத்தரவிட்டார்.  அக்கோயிலே தற்போது வழிபாட்டில் ஊல்லது. சாளக்கிராம கல்லைனால் ஆன மூலவர் சிலையின் உயரம் 11 அடி. கிழக்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் முயற்சி வெற்றி பெறும். கருவறைக்கு அருகில் பார்த்தால் சுவாமி சிலை சிறியதாகவும் வாசலுக்கு அருகில் இருந்து பார்த்தால் பெரியதாகவும் தோன்றுவது வித்தியாசமானது. அஸ்திவாரம் இல்லாமலேயே சமதளமான பாரையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரி சுப்ரமணியர் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.  சிவனுக்குரிய வில்வம் தல மரமாக உள்ளது. தமிழ் கன்னடம் தெலுங்கில் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆதிகாலத்தில் தேவர்கள் ரிஷிகள் கூட்டமாக வழிபட்டதால் கூட்டாத்திரி மலை என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் குருடு மலை என்றானது.

ஜனவரி 1 மகாபஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கும்   ரத சப்தமியன்று 13 கிமீ சுற்றளவு கொண்ட மலையைச் சுவாமி சுற்றி வருவார். பிப்ரவரி கடைசி ஞாயிறன்று வெண்ணெய் அலங்காரமும் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவமும் நடக்கும்.  கார்த்திகை மாத குமார சஷ்டியன்று 1108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம் 1108  சகஸ்ர மோதக ஹோமம் 1108 வடைகளால் ஆன மாலை சாத்தி பூஜை நடத்துவர்.

இங்கு வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமைக்காக மண்டல பூஜை நடத்துகின்றனர். இங்கு தரப்படும் சந்தனத்தை பூசினால் செல்வம் பெருகும். ராகு கேது தோஷம் அகல வினாயகருக்கு ஏலக்காய் மாலை சாத்துகின்றனர். நினைத்து நிறைவேற 1008 அல்லது 10008 மோதகம் படைக்கின்றனர்.

எப்படி செல்வது

பெங்களூரு   திருப்பதி சாலையில் 80 கிமீ  தூரத்தில் முல்பாகல் இங்கிருந்து 10 கிமீ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s