
நல்லான்பெற்றான் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் சிவலிங்கம். அவரிடம் வேலை செய்தான் நாகமுத்து. சிடுமூஞ்சிக்காரன் யாருடனும் அன்பாக பழகமாட்டான். அவனிடம் வியாபாரத்தை கவனிக்க சொல்லி விவசாய பணிக்கு சென்று விடுவார் சிவலிங்கம்.
வாடிக்கையாளர் பேரம் பேசினால் முகத்தில் அடிப்பது போல மறுத்துப் பேசுவான் நாகமுத்து. இதனால் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்தது. கொள்முதல் செய்த காய்கறிகள் விற்பனையாகாமல் அழுக துவங்கின. கடையில் வருமானமில்லாமல் முதலீடு நஷ்டமானது. விசாரித்த சிவலிங்கம் காரணம் பிரிந்து நாகமுத்துவை அழைத்தார். வேலைக்கு வர வேண்டாம் சம்பள பாக்கியை வாங்கிச்செல்…………..இதைக் கேட்டு இடி தாக்கியது போல் உணர்ந்தான் நாகமுத்து.
ஐயா…….எந்த தவறும் செய்யாத என்னை திடீரென வேலையை விட்டு நிறுத்தினால் எங்கே போவேன் என் உழைப்பை நம்பித்தான் குடும்பம் உள்ளது. கருணை காட்டுங்கள்….என்றான். வேலையை விட்டு நிறுத்துவதாக கூறியதும் எப்படி வருந்துகிறாய் என் பேச்சு வேதனையை உண்டாக்கி விட்டதல்லவா……………கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு கடுமையாக பேசியிருப்பாய் சுடு பேச்சால் கடைப்பக்கமே வரவே பயப்படுகின்ற்னர் இனிமையற்ற பேச்சு தவறல்லவா…………… புரிகிறது ஐயா………இனிமேல் இனிமையாக பேசி வியாபாரத்தை பழைய நிலைக்கு எடுத்து வருகிறேன் என்னை நம்புங்கள்………கெஞ்சாத குறையாக கேட்டான். அவனை மன்னித்தார் கனிவாக பேசி வியாபாரத்தை பெருக்கினான் நாகமுத்து.