எந்த கடவுளுக்கு எந்த வகையான உணவுகள் பிடிக்கும்?

தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தினசரி இறைவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று   சாஸ்திரம் சொல்கிறது .நம் வீட்டில் பூஜையறையில் தெய்வங்களை வைத்து இருந்தால் மட்டும்

போதாது .நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என முழுமையாக நம்ப வேண்டும்.  எந்த பொருள் வாங்கினாலும் முதலில் கடவுளின் பாதத்தில் வைத்து இது நீ கொடுத்தது உனக்கு நன்றி என மனதார சொல்ல வேண்டும்.   தினமும் நாம் சமைப்பதை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடும் போது தான் நமக்கு அது பிரசாதம் ஆகிறது. கடவுள் முக்காலமும் அறிந்தவர் .அவரிடம் இல்லாதது ஒன்றும் இல்லை .நமக்கு தினமும்

உணவு கிடைப்பது கடவுள் அருளால் தான் .

அதற்காகத்தான் நாம் அவருக்கு நன்றி செல்லி வழிபடுகிறோம் .

கடவுளுக்கு 18 வகை பட்சணத்துடன் தான் நைய்வேத்தியம் செய்ய வேண்டும் என்று இல்லை .பழங்கள் , உலர் திராட்சை , கற்கண்டு ,பேரீச்சம்பழம் ,பால் வைத்து நைய்வேத்தியம் பண்ணலாம். இப்பொழுது எந்த கடவுளுக்கு எந்த நைய்வேத்தியம் விருப்பம்? என்பதை பற்றி பார்ப்போம் .

விஷ்ணு:

விஷ்ணுவுக்குப் பிடித்த உணவு என்று தனியாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நைவேத்திய உணவென்றால் மகாவிஷ்ணுவுக்கு இஷ்டம் என்பது ஐதீகம். மஞ்சள் நிற சர்க்கரைப் பொங்கல்,புளியோதரை, லட்டு.

கண்ணன்:

கிருஷ்ணாவதாரக் கண்ணனுக்கு வெண்ணெய்யும், அவலும் என்றால் ப்ரியம் என்று சொல்கிறது குசேலர் கதை.

சரஸ்வதி:

கல்விக்கு அதிபதியான சாரதாம்பிகைக்கு வெண்பொங்கல் என்றால் ப்ரியம்.

சிவன்

வெண் பொங்கல் ,வடை, வெறும் சாதம்

பாலில் குங்குமப்பூ சேர்த்துப் படைத்தால் எம்பெருமானின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

கணபதி

மோதகம் ,அவல் ,சர்க்கரைப் பொங்கல் ,கொண்டைக் கடலை ,அப்பம் ,முக்கனிகள்.

முருகன்:

வடை ,சர்க்கரை பொங்கல் ,வேக வைத்து தாளித்த கடலை பருப்பு ,தினை மாவு.

பொதுவாகப் பழங்களும் வெல்லமும் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், தமிழ்நாட்டில் பழனி முருகனுக்குப் பஞ்சாமிர்தம் செய்து படைக்கிறார்கள்.

மகாலஷ்மி:

செல்வத்துக்கு அதிபதியான மகாலஷ்மிக்கு அரிசிப் பாயசம் என்றால் இஷ்டம். பாயசம் மட்டுமல்ல. அனைத்து இனிப்பு வகைகளும் அவளுக்கு இஷ்டமே!

துர்கை:

துர்கைக்கு பாயசம்,

சர்க்கரை பொங்கல்,உளுந்து வடை .

ஐயப்பன்:

மணிகண்டனான ஹரிஹரனுக்கு அரவணப் பாயசம் என்றால் இஷ்டம்.

ஹனுமன்:

சிவப்பு நிறத் துவரம் பருப்புடன் வெல்லம் சேர்த்துச் செய்கிற பண்டங்கள் ஹனுமனுக்கு ரொம்ப இஷ்டம்.

அம்மன்:

மாரியம்மன், 

பாளையத்தம்மன், கெளமாரியம்மன், கருமாரியம்மன், காளியம்மன் என தமிழகத்து அத்தனை அம்மன்களுக்கும் ஆடிக்கூழ் அத்தனை இஷ்டம் என்று நம் எல்லோருக்குமே தெரியும்.

சனி_ராகு_கேது:

மூவருமே அரைத் தெய்வ, அரை அசுர ரூபங்கள் என்பதால் இவர்களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் ரொம்பப் பிடிக்குமாம்.

குபேரன்

சாட்ஷாத் அந்த திருமலை வெங்கடேஷன் பெருமாளுக்கே கடன் கொடுத்து உதவும் அளவுக்கு செல்வாக்கு மிக்க தனவந்தக் கடவுளான குபேரனின் அருள் பெற வேண்டுமெனில் லட்டு மற்றும் சீதாப்பழ பாயசம் படைத்து அவனை வணங்கலாம்.

நன்றி…அவன் அருளாலே…அவன் தாள் வணங்கி…..!

நன்றி.    ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s