வைஷ்ணவி தேவி

நமது இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள அம்மன் தலம். கடல் மட்டத்திலிருந்து, சுமார் 5200-அடி உயரத்தில், ‘திரிகுதா’ என்னும் இமயமலையின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள குகையில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவியின் இந்த  சக்தி பீடம்.

இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்புரிகின்றாளாம்.

மூலஸ்தானத்தில், ஶ்ரீமகாவிஷ்ணுவின் சொரூபம் எனப்படும் வைஷ்ணவ தேவியின் இருபுறமும் ஶ்ரீமகாகாளியும், ஶ்ரீமகா சரஸ்வதியும் 

வீற்றிருக்கும் அருட்காட்சி தலச்சிறப்பு.

(துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் முப்பெரும் சக்திகள்தான் இந்த வைஷ்ணவி தேவி எனக்கூறப்படுகிறது)

(அக்காலத்தில்,

ஶ்ரீதர் பண்டிதர் எனும் தேவி உபாசகர் கனவில் வைஷ்ணவி தேவி தோன்றி, பின் இங்கு வந்து அமர்ந்ததாகவும்,

ஶ்ரீராமர் ‘அடுத்த அவதாரத்தில் உனை மணப்பேன்’ என்று தந்த வாக்குறுதியை ஏற்று,

தன் தவ வலிமையால்  மூன்று மகாதேவிகளின் சொரூபமாக இத்தல வைஷ்ணவி தேவி மாறியதாகவும் இரு புராணங்கள் உள்ளது)

ஐனவரி, பிப்ரவரி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில்

24-மணிநேரமும்  திறக்கப்பட்டிருக்கும் இத்தலத்தில்,

 வருடம்தோறும் நவராத்திரி காலங்களில் இந்த ‘திரிகுதா’ மலைப்பகுதியே (வண்ண விளக்குகளால்)

அலங்கரிக்கப்பட்டு,

ஆயிரகணக்கான பக்தர்கள் கொண்டாடும்

நவராத்திரி திருவிழா 

வெகு விசேஷமாம்.

தடைபெற்றுக்கொண்டேயிருக்கும் அத்தனை சுபநிகழ்வுகளும் விரைவில் இனிதாக நடந்தேற,  முப்பெரும் தேவிகளும் ஒருங்கே

அருள்புரியும் இத்தல ஶ்ரீ வைஷ்ணவிதேவி பகவதியை வழிபடுகின்றனர்).

ஓம் சக்தி பராசக்தி:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s