மருந்தாக காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி?

காய்கறிகளால் உடலில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தீர்க்கலாம்.  ஆனால்  இக்காய்கறிகளை தோல் நீக்கினால் வேக வைத்தால் பலன் கிடையாது.  இது பலரும் பயன் பெற்ற பெற்று வரும் குறிப்பு.

ரத்த அழுத்தத்திற்கு  வெண்டைக்காய்

 ஐந்து அல்லது ஆறு வெண்டைக்காயைச் சுடு நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து உணவு உண்ணும் முன் பச்சையாக நன்கு மென்று தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிட்டும்

இதய நோய்க்கு வாழைக்காய்

வாழைக்காயை கழுவித் தோலோடு  நறுக்கிப் போட்டு சாறு பிழிந்து குடித்து வந்தால் ரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

வெள்ளை பூசணிச்சாறு

புற்று நோயால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் தங்களுடைய உடலில் உள்ள புளிப்புத்தன்மையைக் குறைக்க வேண்டும். அத்துடன் வெள்ளைப் பூசணிச்சாறு எடுத்து தினமும் பருகி வந்தால் நோய் குணமாகும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

சிறு நீர் சிக்கலுக்கு தக்காளி கத்தரிக்காய்

இரண்டு கத்தரிக்காய் இரண்டு தக்காளி எடுத்து சுடு நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தினசரி குடித்து வந்தால் கெட்ட நீர் வெளியேறி நாளடைவில் சிக்கல் தீரும். எளிய மருத்துவம் இது.

கொத்தவரங்காய்  எலுமிச்சை மருத்துவம்

நரம்பு பிரச்னை பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் பக்கவாதம் ஆகிய பாதிப்புக்களுக்கு கொத்தவரங்காய் ஒரு எலுமிச்சம்பழம் இரண்டையும் மிக்ஸியில் தோலுடன் அரைத்துச் சாறு எடுத்துக் குடித்து வரப் பயன் பெறலாம்.

மன அமைதியின்மை தூக்கமின்மை

புடலங்காயைச் சாறு எடுத்து குடித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மஞ்சள் பூசணி   அரசாணிக்காய் மருத்துவ பயன்

குடல் தசை கர்ப்பப்பை சிக்கல்கள் இருப்பின் அரசாணிக்காய் மஞ்சள் பூசணி சாறு எடுத்துப் பருகினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கொலஸ்ட்ராலுக்கு கோவைக்காய்

கோவைக்காய் கோவை இலைச்சாறு எடுத்துப் பருகினால் இச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.

ஆஸ்துமா சுவாசக் சிக்கல்

முருங்கை இலையைச் சாறு எடுத்து சிறிது தேன் கலந்து குடித்து வரலாம். நன்கு முற்றிய முருங்கை விதையினைச் சப்பி சாப்பிட்டாலும் இந்தப் பிரச்னைகள் தீர்ந்து நலம் பெறலாம்.

பீர்க்கங்காயின் பயன்

பெப்டிக் அல்சர் எனும் அல்சர் நோயினால் அவதிப்படுவோருக்கு பீர்க்கங்காய் அற்புத தீர்வு அளிக்கும். பீர்க்கங்காயைச் சாறு எடுத்தோ அல்லது மென்று தின்றாலோ பயன் கிட்டும்.

மூட்டுவலி எலும்பு பிரச்னை தீர

கொப்பரை தேங்காய் அல்லது நன்கு முற்றிய எண்ணெய் பசையுள்ள தேங்காயை மென்று தின்று வந்தால் சிக்கல் அகலும்.

தைராய்டு ஹார்மோன் சமமின்மை

எலுமிச்சம் பழத்தைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்து தேன் சேர்த்தோ சேர்க்காமலோ பருகினால் மிகுந்த பலன் அளிக்கும்.

கால் மரத்து போதல்

சர்க்கரையினால் காலில் மரமரப்பு இருக்கும்  பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்து சல்லடையில் சலித்து தினம் காலை மாலை ஒரு தேக்கரண்டி வென்னீருடன் எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

தகவல் நன்றி   பெண்மணி    வெல்லை பொ சுப்பம்மாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s