காக்கி சீருடையின் கதை

புராதன இந்தியாவின்  வடமேற்கு எல்லையாக இருந்தது கைபர் கணவாய். ஆசிய நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் இப்போது உள்ளது. ஸ்பின் கார் மலைத்தொடரில் உள்ள நிலப்பரப்பு தான் கைபர் கணவாய். இது 3500 அடி உயரத்தில் உள்ளது. இது தான் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை இந்தியாவுடன் இணைத்தது. பல நாட்டவரும் வணிகர்களும் வந்து சென்ற பழமையான வழி இது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது 1847ல் ஆங்கிலேய படையில் வட மேற்கு பிரிவு தளபதியாக ஹாரி லூம்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.  கைபர் கணவாய் எல்லையில் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட மலைவாசிகளை ஒடுக்கும் பணி அவரிடம் வழங்கப்பட்டது. பெரும் படையுடன் முகாமிட்டும் ஒடுக்க முடியவில்லை. மண் புழுதியும் மலைவாசிகளின் கொரில்லா தாக்குதலும் ஆங்கிலேய படையை நிலைகுலைய வைத்தன.

சிவப்பு வண்ண சீருடை அணிந்திருந்தது ஆங்கிலேய படை. இது நீண்ட தொலைவு வரை எளிதாக அடையாளம் காட்டியதால் மலைவாசிகள் துல்லியமாக கண்டறிந்து தாக்கினர்.  இதை அறிந்த ஹாரி சீருடை வண்ணத்தை மாற்ற முடிவு செய்தார்.  படை நடத்திய இடத்தில் புதிய சீருடையை தயாரிக்க முடியுமா/  என்ன……….. எனவே படையின் சீருடையை புழுதி நிறத்தில் மற்றும் முடிவுக்கு வந்தார்.  அந்த பகுதியில் ஒரு வகை பழம் மிகுதியாக காணப்பட்டது. அதன் சாறு புழுதியின் நிறத்தை ஒத்திருந்தது. அந்த பழங்களை சேகரித்து சாறு பிழிந்து சீருடையில் பூசி நிறத்தை மாற்ற உத்தரவிட்டார்.  இதன் பின் ஆங்கிலேய படை முன்னேறி எதிரியை முறியடிக்க முடிந்தது.  இந்த வண்ணம் பூசிய உடையை காக்கி என்றனர். அதற்கு உருது மொழியில் புழுதி என்று பொருள்.

இந்த மாற்றம் மற்ற படை பிரிவுகளிலும் அமல் படுத்தப்பட்டது. அடுத்தடுத்த போர்களில் ஈடுபட்ட வீர்ர்களின் சீருடையில் சிவப்பு மறைந்து காக்கி வண்ணமாக மாறியது.  அனைத்து படை பிரிவுகளிலும் 1880 ல் காக்கியே சீருடையானது. விழாக்கால அணிவகுப்புகளில் மட்டும் சிவப்பு சீருடையணிந்து ஆங்கிலேய படை.  ஆப்பிரிக்காவில் நடந்த போயர் போரிலும்  ஆங்கிலேய வீர்ர்கள் ஆதிகம் உயிரிழக்க சிவப்பு சீருடையே காரணமாக இருந்தது. இதையடுத்து அங்கும் காக்கி சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பாவில் காக்கி சீருடை வேகமாக பரவியது. முதல் உலகப்போரில் காக்கியே ஆதிக்கம் செலுத்தியது இது.  இந்தியாவில் தோன்றி உலகெங்கும் பரவியது என்றும் பெருமையுடன் சொல்லலாம்.

தகவல் நன்றி    சிறுவர் மலர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s