
மாஞ்சி கிராமத்தில் இலவச வைத்தியத்தால் பிரபலமடைந்தார் வைத்தியர் குரு. கற்ற அறிவை விட அனுபவ அறிவே சிறந்தது எனும் கொள்கை உடையவர். மூலிகை வைத்தியம் இடம் பொருள் அறிந்து செயல்படல் என அனுபவ குறிப்புகளை சீடர்களுக்கு கூறியிருந்தார். சீடர்களில் ஒருவன் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதில் கைதேர்ந்தவன். அனுபவ அறிவின் சிறப்பை உணரவில்லை.
ஒரு சமயம் பணக்கார நோயாளிக்கு வைத்தியம் பார்க்க சென்றார் வைத்தியர். உடன் அந்த சீடனையும் அழைத்து சென்றார். நோயாளியை பரிசீலித்த பின் சாத்துக்குடி பழங்களை சாப்பிடாதீர் அவை உங்களுக்கு நல்லதல்ல என கூறியிருந்தேனே நினைவில்லையா……..என கடிந்து கொண்டார். மன்னித்து விடுங்கள் நீங்கள் கூறியபடியே நோன்பு கடைபிடிக்கிறேன் சாத்துக்குடியை இனி தொடமாட்டேன் என்றார். இதைக்கேட்ட சீடனுக்கு வியப்பு வெளியில் வந்ததும் சாத்துக்குடி சாப்பிட்டதை எப்படி கண்டுபிடித்தீர்கள்…………அது எந்த நாடியில் தெரிந்தது……. என கேட்டான்.
கட்டிலின் கீழே சாத்துக்குடி தோல் பசுமையாக இருந்தது. அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு நாம் வருவதை அறிந்ததும் கீழே போட்டு விட்டார் என புரிந்துக்கொண்டேன்………….. என்றார் குரு இதை பாடமாக எடுத்துக்கொண்டான் சீடன்.
மறு நாள் ஒரு ஏழை விவசாயிகு வைத்தியம் பார்க்க வேண்டி இருந்தது. தன்னை வைத்தியம் செய்ய அனுமதிக்க கேட்டான் சீடன் சம்மதித்தார் வைத்தியர். அவரை பரிசோதித்த சீடன் நீங்கள் சமைத்த உணவையே உண்ண வேண்டும் குறிப்பாக பச்சைப்புற்களை உண்ணக் கூடாது………….என்றான். இதைக் கேட்ட வைத்தியர் வேக வைத்து உண்ண வேண்டும் என்பது சரி……புற்களை உண்ணாதே என்று சொன்னாயே அது ஏன்………..என வினவினர். குருவே அவரது கட்டிலின் கீழ் புற்கல் கிடந்தன. ………… என விளக்கினான் சீடன். உண்டதை கக்குவது போல வைத்தியம் பார்ப்பது தவறு என புரிய வைத்தார் வைத்தியர்.