
தமிழில் முந்திரி மலையாளத்தில் அண்டிப்பருப்பு இந்தியில் காஜூ என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. Acaju என்பது தூப்பி பழங்குடியினர் முந்திரியை அழைக்கும் சொல். அதற்கு தானாக விளையும் கொட்டை என்று அர்த்தம். அதைத்தான் போர்த்துக்கீசியர்கள் caju என்று பதிவு செய்து வைத்தார்கள். caju என்பதில் இருந்துதான் cachou என்ற வார்த்தை உருவாகி பின் காலபோக்கில் cashew nut என்ற ஆங்கில வார்த்தையாக மாறியிருக்க வேண்டும். ஆனால் Cashew nut என்ற வார்த்தை எப்படி உருவானது என்பதற்கு நம் ஊரில் வாய்வழிப் பழங்கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு.

போர்ச்சுகிசியர்களால் இங்கே முந்திரி செழிப்பாக விளைய ஆரம்பித்தது. சாதாரண மக்களும் அதைச் சந்தையில் விற்க ஆரம்பித்தார்கள் அப்போது அங்கே வந்த பிரிட்டிஷாருக்கு இந்த முந்திரிபருப்பு பற்றித் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஒருவன் சந்தையில் முந்திரி விற்றுக்கொண்டிருந்த வியாபாரியிடம் அதை வாங்கிச் சுவை பார்த்திருக்கிறார். அவருக்கு அந்தச் சுவை பிடித்ஹ்டிருந்த்து. உடனே அதன்பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார் what is the name of this nut?

நம்ம ஊர் வியாபாரிக்கு ஆங்கிலம் புரியவில்லை வெள்ளைக்காரன் விலையைத்தான் கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு காசுக்கு எட்டு என்று பதில் சொல்லிக்கொண்டிருக்கிரார். அதை வெள்ளைக்காரன் Cashew nut என்ரு புரிந்து கொண்டான். காசுக்கு எட்டு என்பதுதான் Cashew nut என்ற ஆங்கில சொல்லானது என்பது வெள்ளைக்காரன் காலத்துக் கதை.
தகவல் நன்றி அவள் விகடன்.