சம்பங்கிப் பூவின் மகத்துவம்

பூஜைக்கு உகந்த சம்பங்கிப் பூ மருத்துவக் குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது.  அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் பூ இதழ்களும் தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது.  பூஜைக்கு ஏற்ற பூவாக மாட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் பலன் தரக்கூடியதாக உள்ளது சம்பங்கி.  சம்பங்கிப் பூவின் பலன்களைப் பார்ப்போம்.

சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணெயில் 50 கிராம் சம்பங்கி பூவைப் போட்டு நன்றாக காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய்தான் சம்பங்கி தைலம் என்று அழைக்கப்படுகிறது.   இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை நன்றாகத் தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கிப் பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி  20 கிராம் வெள்ளரி விதை 20 கிராம் பயத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு சேர மழுமழுவென அரைத்துக் கொண்டால் பவுடர் ரெடி,  இத்தைலம் தேய்த்து குளிக்கும்போது பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

சம்பங்கி பூவின் பலன்கள்

4 சம்பங்கி பூக்களுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துச் சூடுபறக்க நெற்ரிப் பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு தம்ளர் தண்ணீரில் ஐந்து சம்பங்கிப் பூக்களைப் போட்டு பாதியாக்சக் சுண்டும் வரை காய்ச்சி அந்த தண்ணீரை காலை மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

சம்பங்கிப் பூவைச் சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதைக் கண்களைச் சுற்றிப் பூசி 10 நிமிடத்துக்குப் பிறகு கழுவ வேண்டும். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி எரிச்சல் நீர் வடிதல் வறட்சி போன்ற பிரச்னைகள் தீரும். கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்  கண்கள் பளிச்சிடும். 

காய்ச்சிய பாலில் 2 சம்பங்கிப் பூக்கலைப் போட்டு ஆறவைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து ஒரு தம்ளர் வீதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர உடல் தெம்பும் பலமும் பெறும்.  200 கிராம் நல்லெண்ணெயுடன் 50 கிராம் சம்பங்கிப் பூவைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு வெடிப்பு மறையும்.  இதில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறைக் கலந்து ரசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இதைத் தினமும் காலை மாலை இரு வேளையும் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மென்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாத வலி நீங்கும்.

தகவல் நன்றி            கவிதா சரவணன்   ஸ்ரீரங்கம்   மங்கையர் மலர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s