“செல் “களைக் காக்கும் நெய்

தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் பலவித நன்மைகள் கிடைக்குமென்று ஆயுர்வேத ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஒரு ஸ்பூன் நிறைய நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்தே வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டும்.

நெய்யில் இருக்கும் ரசா என்னும் சத்து உடலில் இருக்கும் செல் களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.  ஆகையால் காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் நம் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.  செல்கள் இறந்து போவதால் நமது சருமம் பொலிவிழந்து வாடிப்போய் விடுகிறது.   நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துயிர் பெற்று சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.  மேலும் சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள நெய் உதவுகிறது.  சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நெய் ஓர் இயற்கையான மசகு எண்ணெய் ஆகும்.  ஆதனால் இது முட்டி போன்ற எலும்பு கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்புத் தன்மையை தக்க வைக்கிறது.  இதனால் மூட்டுவலி அல்லது வாதங்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.  நெய்யில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு சத்து எலும்புகளை வலிமை அடைய செய்யும்.  காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறுசுறுப்படையச் செய்யும். மூளை வேகமாக செயல்படுவதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெற்று ஞாபகசக்தியை அதிகரிக்கும்.  டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளையைப் பாதிக்கும் நோய் குறிகளிடம் இருந்து நம்மை இது பாதுகாக்கும்.

நெய் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கு மாறாக தினமும் காலை நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.  மெடபாலிக் அளவை அதிகரித்து உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை இது வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது.  தினமும் காலை எழுந்தவுடன் நெய் சாப்பிடுவது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடியை மிருதுவாகவும் நீளமாகவும் மாற்றி வேர்க் கால்களை வலிமை அடையச் செய்யும். இதனால் முடி உதிர்வது குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.

பால் தொடர்பான பொருட்களைச் சாப்பிடுவதால் வாந்தி வரும் என்பவரா நீங்கள்? கவலை வேண்டாம்  லேக்டோ இண்டாலரன்ஸ் உள்ளவர்கள் கூட நெய்யை சாப்பிடலாம் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.  ஆக நெய் நமது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது

தகவல் நன்றி   ஜோ ஜெயக்குமார்  சிவகங்கை  மங்கையர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s