ஆஹா தகவல்

பாம்பு முட்டைகள் இட்டாலும் அடைகாப்பதில்லை  ஆனால் முட்டைகளைப் பாதுகாக்கும் இந்திய மலைப்பாம்பு இனம் மட்டும் இதில் வித்தியாசமானது. தன் உடலால் முட்டைகளைச் சுற்றிக்கொள்ளும். இதன் மூலம் தன் உடல் வெப்பத்தினால் முட்டைகளை அடைகாக்கும்.

இந்தியாவில் எழுதப்பட்ட மிக நீளமான நாவல்  அவகாசிகள் என்ற மலையாள நாவல்தான்.  இது 4 தொகுதிகளில் 3958 பக்கங்கள் கொண்டது. இதை எழுதியவர் கிருஷ்ணன் குட்டி மேனன் என்பவர்.  இந்த நாவல் 1981 ல் சாகிதிய அகாதெமி பரிசை வென்றது.

கோவாவில் மார்ஷோல் என்கிற ஊரில் ராவல் நாத் என்கிற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தேவகி கிருஷ்ணராக அம்மாவான தேவகி மடியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.  இது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சி.  அதனால் தேவகி கிருஷ்ணா என்றே பெயர்.

ABCD இந்த நான்கு எழுத்துக்கள் ஆங்கிலத்திற்கு ஆதாரமாக விளங்கினாலும் தொடர்ந்து சுமார் 99 ஆங்கில வார்த்தைகளை இந்த ABCD  ஆகிய நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுத முடியுமென்பது வியப்பானதுதானே/  அந்த சொற்கள்    ONE TO NINETY NINE  எழுதிப்பாருங்கள்.

மைசூரின் பழைய பெயர் எருமையூர்  மகிஷம் என்றால் எருமை என்ரு பொருள். எருமை வடிவில் வந்த அசுரனை மகிஷாசுரமர்த்தினி என்னும் பெண் தெய்வம் கொன்று ஆடிசி பெற்று விளங்கியதால் இவ்வூர் மைசூர் ஆனது.

பிரிட்டனை ஆண்ட முதலாம் ஹென்றி என்ற மன்னர்தான் கெஜம் என்ற அளவை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய மூக்குக்கு நேராக கை நீட்டி கட்டை விரலை உயர்த்தி தன் மூக்கிலிருந்து கட்டைவிரல் வரை உள்ள அந்த தூரம் தான் ஒருகெஜம் என்று நிர்ணயித்து அவர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அளவீடுதான் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றது.

உலக மக்களில் அதிகம் தேனீர் அருந்துபவர்கள் இங்கிலாந்து நாட்டவர்கள்தான்.

யூதர்கள் வியாபாரம் பேசி முடித்ததும் அதை உறுதி செய்யும் விதமாக தங்கள் மோதிரங்களை மாற்றிக் கொள்வார்கள்.

ராம்விகியா என்று அழைக்கப்படும் பூவே உலகின் மிகப் பெரிய பூவாகும்.  இது சுமத்திரா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதன் அகலம் 3 அடி  இந்தப் பூவின் ஒவ்வொரு இதழும் ஒரு அடி நீளம் உள்ளது.  இந்தப் பூவில் ஒன்றரை பாட்டில் தேன் இருக்கும். இது ஒரு ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தது.

அரவுண்ட் தி வேர்ல்ட் என் 80 டேஸ் எனும் ஆங்கிலப்படத்தில் 38000 ஆடுகள்  2848 எருமைகள்  950 கழுதைகள்  800 குதிரைகள்  513 குரங்குகள்  17 காளைகள் 15 யானைகள் இடம்பெற்ருள்ளன அதிக விலங்குகள் காட்சியளிக்கும் ஒரே படம் இதுதான்.

மராட்டிய மானிலத்தில் வார்தா நகருக்கு அருகில் சிலையும் மேற்கூரையும் இன்றி ஒரு கோயில் உள்ளது.  இதை கீதைக் கோயில் என்று அழைக்கிறார்கள்.  இக்கோயிலில் 700 பளிங்கு கற்களில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ல சுலோகங்களை மராத்தியில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

சுற்றுலாவின் தந்தை என்றழைப்படுவர் தாமஸ் குக்  1814 ம் ஆண்டு இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை கணிசமான நபர்களுடன் ரயில் பயணம் மேற்கொண்டார்  உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில் முறை சுற்றுலா இது.  உலகின் முதல் பயண முகவர் என்றும் இவர் அடையாளப்படுத்தபடுகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s