ஆன்மிகத் துளிகள்

சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் பிரகாரத்தில் நின்ர கோலத்தில் வீணை வித்யாம்பிகை என்ற பெயருடன் சரஸ்வதி தேவியையும் கடம்பவன தட்சிணரூபிணி எனும் பெயரில் தட்சிணாமூர்த்தியி பெண் வடிவ சக்தியையும் தரிசிக்கலாம். வியாழக்கிழமையன்ரு இவர்கள் சன்னதியில் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் கலவியில் முன்னேற்றம் கிடைக்கும்.

நவராத்திரி விழாவின் போது நெமிலி பாலா திருபுரசுந்தரி கோயில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்   அந்தத்  தேங்காயை மறு வருடம் நவராத்திரி விழாவின் போது முதல் நாள் பூஜித்து உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

மும்பா தேவி ஆலயத்தில் அம்பிகை ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். இங்கே நவராத்திரி நாட்களில் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் அபிஷேகம் செய்கின்றனர்.  நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக்கொண்டால் குடும்பத்தில் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கழுக்குன்றம் கோயிலிலுள்ள திரிபுர சுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் நவராத்திரியில் நவமி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.  மற்ற நாட்களில் பூஜை மட்டுமே.

காஞ்சிபுரத்திலுள்ள கயிலாய நாதர் கோயிலில்  எட்டுக் கரங்களுடைய துர்கையும் புதுவைக்கு அருகிலுள்ள பாகூர் என்னுமிடத்தில் உள்ள கோயிலில் நான்கு கரங்கள் உடைய துர்கையும் ஆவுடையார் கோயிலில் பன்னிரு கரங்களுடைய துர்கையும் காட்சியளிக்கின்றனர்.

சரஸ்வதி கையிலிருக்கும் வீணை சிவ பெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது   வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்தப்பிறகு அந்த வீணையைத் தன் சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக புராணம் கூறுகிறது  இந்த வீணைக்கு கச்சாபி என்று பெயர்.

தஞ்சாவூர் மாவட்டம் வேதாரண்யம் கோயிலில் உள்ள சரஸ்வதி தேவியின் கையில் வீணை இல்லாமல் காட்சி அளிக்கிறாள்.  இதுபோன்று வேறு எங்கும் காண இயலாது.  இந்தக் கோயிலில் இருக்கும் அம்மனின் பெயர் யாழைப் பழித்த மொழியாள்   யாழை விட இனிமையான குரல் வளம் கொண்டவளாம்  அப்படிப்பட்ட அம்மன் முன் வீணை எதற்கு என்பதால் சரஸ்வதி தேவி கையில் வீணை இல்லையாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s