நியூ[ஸ்]மார்ட்

இங்கிலாந்தில் முஸ்லிம் தொண்டு நிறுவனம் ஒன்று 153 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ளது. லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து இந்த சமோசாவை செய்துள்ளனர்.  சமோசாவை கின்னஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருந்த பின்னர் உலகின் மிகப்பெரிய சமோசா என சான்றிதழ் வழங்கினர்.  இந்த ராட்சத சமோசாவை செய்வதற்கு 15 மணி நேரம் ஆனது.  சோதனைக்குப் பின்னர் சமோசாவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதாகவும் தொண்டு நிறுவத்தினர் கூறினர்.

மிகப் பெரிதான் விண்கல் ஒன்று செப்டம்பர் 1 ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்றும் இதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா தெரிவித்துள்ளது.  இதற்கு ஃப்ளாரென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  நாசாவின் ஸ்பிட்சர் ஸ்பேச் தொலை நோக்கி மற்றும் நியோவைஸ் மிஷன் ஆகியவற்றின் ஆராய்ச்சியின்படி இது 4.4 கிமீ அளவு கொண்டதாகும்   பூமியை 7 மில்லியன் கிமீ தொலைவில் இந்த விண்கல் பூமியைப் பாதுகாப்பாகக்  கடக்கும்  1890 ஆண்டுக்குப் பிறகு விண்கல் ஒன்று பூமிக்கு இவ்வளவு நெருக்கமாக கடந்து செல்லும் என்கின்றார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவன்ம் ஒன்று தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக ஒரு க்ரீமை உருவாக்கியிருக்கிறது.  இந்த க்ரீமை முகத்திலும் உடலிலும் தடவி கொண்டால் நன்றாகத் தூங்க முடியுமாம்.  இதில் கோகோ வெண்ணெய் ஓட்ச் நறுமண எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆபத்தில்லாத அழகு சாதனம் என்கிறார்கள் நிறுவத்தினர்.

2004 ஆம் ஆண்டு கனடா நாட்டின் அல்பெர்டாவில் தனது குடும்பத்துக்கு சொந்தமான காய் கறிப் பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேரி கிராம்ஸ் தனது வைர மோதிரத்தை தொலைத்து விட்டார். அண்மையில் அவரின் மருமகள் தங்கள் காய்கறி தோட்டத்தில் நல்ல தடிமனான கேரட் ஒன்றைப் பிடுங்கியபோது அதன் நடுவே காணாமல் போன வைரமோதிரம் சிக்கிக் கொண்டிருந்தது.  கேரட்டில் கிடைத்த மோதிரம் எத்தனை கேரட் என்பது தெரியவில்லை.

ஹொக்கைடோ என்பவர் ரோபோ தொழில் நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஜப்பானிய ரோபோட்டிக்ச் நிறுவனத்தின் உரிமையாளர்.  சமீபத்தில் ஒரு சோளக்கொல்லை பொம்மை ரோபோவை ஓநாய் வடிவத்தில் உருவாக்கியிருக்கிரார்.  சிவப்பு கண்களும் கோரைப் பற்களுமாகக் காட்சி தரும் இந்த ஓநாய் கத்தினால் பறவைகள் மட்டுமின்றி மனிதர்களே அலறி ஓடி விடுகிறார்களாம்.  இதை விவசாயக் கூட்டுறவு சங்கம் ஒன்று வாங்கி பரிசோதனை செய்து பார்த்து விட்டு சிறப்பாக வேலை செய்வதாக்ச் சொல்லியிருக்கிறது. தூரத்தில் வரும் பறவைகள் விலங்குகளைக் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு மிக சிறந்த தொழில் நுட்பம் இதில் இருக்கிறது.  ஏதாவது உருவம் அருகே வந்தால் தலை வலப்பக்கமும்  இடப்பக்கமும் நகர்கிறது.  இது பல்வேறு விலங்குகளின் குரல்களிலிருந்து மனிதனின் குரல் வரை 40 வகையான ஒலிகளை எழுப்புகிறது.  இதன் விலை 1 15 000 ரூபாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s