பொன் ஓணத் திருவிழா

கேரளத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் எடுத்துச் சொல்லும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. மலையாளிகள் வெவ்வேறு இடங்களில் சென்று தங்கியிருந்தாலும்  வருந்தோறும் ஓணத்துக்கு கேரளம் வந்து வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

மஹாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் திருவிழா கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே  ஓணத்திற்கு பத்து தினங்களுக்கு முன்பிருந்தே வாசலில் அத்தப்பூ இடுதல் எனப்படும் பூக்கோலம் அமைத்து மகிழ்வர். பெண்களின் கலாரசனைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது ஓணத்தின் சிறப்பம்சம். 

ஓண் சத்ய எனப்படும் விருந்து அவியல் காளன் ஓலன் எரிசேரி சக்கப் பிரதமன்  மொளகுஷ்யம்  கூட்டுக்கறி  உப்பேறி பப்படம் உப்பிலிட்டது என்று ஓண விருந்து 64 அயிட்டங்கள் நிறைந்திருக்கும்.

ஓண தினத்தன்று ஆண்கள் முகத்தில் மஞ்சள் கறுப்பு சிவப்பு வெள்ளைக் கோடுகளைத் தீட்டி புலிவேஷமிட்டு உடுக்கை தவில் கொண்டு பாய்ந்து பாய்ந்து புலியாட்டம் ஆடுவர். இதைக் காண ஊரே திரண்டிருக்கும்.  சிறுவர்களும் இளைஞர்களும் குடுகுடு ஆட்டம் பந்தாட்டம் அம்பெய்தல் போன்ற பலதர்ப்பட்ட விளையாட்டுகளை வீட்டிலேயே ஆடி மகிழ்வர். இதற்கு ஓணக்களி என்று பெயர்.

கேரளத்தின் பல்வேறு இடங்களிலும் முக்கிய நகரங்களிலும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் கண்கவர் அணிவகுப்புக்களும் யானை ஊர்வலமும் தவறாமல் நடைபெறும்.  ஆரன்முள்ளா கிருஷ்ணா கோவிலில் ஆண்டுதோறும் படகுப்போட்டி நடை பெறுவது வழக்கம். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஏராளமான படகுகள் இடம் பெறும் இந்தப் போட்டிக்கு சுண்டன் வள்ளம் களி என்று பெயர்.   இதைக்காண பல்வேறு மானிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கேரளத்துக்கு வந்து குவிகின்றனர்.  கேரளத்தின் கலை  கலாச்சாரம் பண்பாட்டுக்கு ஓணம் மிகச்  சிறந்த எடுத்துக்காட்டு.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s