பதவி படுத்தும் பாடு

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில்   அர்னால்ட் ஸ்வாஸ்னேகர்        இருந்தபோது    தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.  ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்” என்று அறிவித்தார்
நாட்கள் நகர்ந்தன …
பதவி போனது ..
புகழ் போனது …

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி “அர்னால்டு ஸ்வாஸ்னேகர் …….

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைப்படம்    எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்லியிருக்கிறார்  …

“நாம் பதவியில் இருக்கும் போது    மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்”
“எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்”
“எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது”
“உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
ஒரு போதும் நம்பாதீர்கள்”
“இது எதுவுமே நிரந்தரம் கிடையாது” ……
ஆகவே   பதவியில்   இருக்கும்   போது   பலன்   கருதாமல்    நன்மைகளை   மட்டும்   செய்வோம்  ….. நிச்சயமாக   எப்போதும்   மகிழ்ச்சியாக   இருக்க   முடியும்…. வாழ்த்துக்கள்…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s