ஈச்சனாரி வினாயகர்

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஈச்சனாரி வினாயகர் கோவில். வேலை நிமித்தமாக கோவையிலிருந்து வெளியூர் செல்லும் மக்களும் வெளியூரிலிருந்து கோவைக்கு வந்து செல்லும் மக்களும் ஈச்சனாரி வினாயகர் திருக்கோவில் முன் ஒரு நிமிடமாவது கண் மூடி நின்று பிரார்த்திக்காமல் செல்ல மாட்டார்கள். ஈச்சனாரி வழியாக செல்லும் பச் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் இருந்தபடியே இந்தப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு கும்பிடு போடாமல் பயணத்தைத் தொடர மாட்டார்கள்.  இவரைக் கும்பிட்டு போனால் இன்னல்கள் அகலும் என்பதுடன் எந்தக் காரியத்தின் நிமித்தம் செல்கிறார்களோ அந்தக் காரியம் சுலபமாக முடியும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

பிள்ளையார் வந்த கதை

ஈச்சனாரி வினாயகர் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  பிள்ளையார் இந்த இடத்துக்கு வந்த கதை ரொம்பவும் சுவாரஸ்யமானது. மேலை சிதம்பரம் எனப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்காக மதுரையிலிருந்து ஒரு பிள்ளையார் சிலையை உருவாக்கி வண்டியில் வைத்து எடுத்துவரும் வழியில் வண்டியின் அச்சு ஓரிடத்தில் முறிந்து போனது.  எவ்வளவு முயற்சித்தும் சரி செய்ய முடியாமல் போக கடைசியில் அந்தப்பிள்ளையாரை அந்த இடத்திலேயே  பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்களாம். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தான் ஈச்சனார்  அந்த பிள்ளையார்தான் ஈச்சனாரி வினாயகர்.

6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் வரப்பிரசாதியாக பக்தர்களுக்கு இங்கு அருள்பாலித்து வருகிறார். கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் வினாயகர் புராணத்தில் வரும் சம்பவங்கள் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.  கோவிலுக்கு உள்ளேயே பூக்கள் செடி கொடிகள் நிறைந்த அழகிய நந்தவனமும்  இருக்கிறது.  கோயில் நடை காலை 5 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும். காலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். தினசரி அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெறுவது இந்தக் கோயிலில் சிறப்பு. கோயிலுக்கென தங்கத்தேர் உள்ளது.

365 நாட்களும் கணபதி ஹோமம்  365 நாட்களும் தங்கத்தேரில் வினாயகர் பவனி வருதல் 365 நாட்களும் அன்னதானம் நடைபெறுவது வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு.  என்று சொல்கிறார் இங்கு பல ஆண்டுகளாக தேங்காய் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரர்.

சங்கடஹர சதுர்த்தி  அமாவாசை  பௌர்ணமி போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெருகின்றன. சித்திரை முதல் நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஈச்சனாரி வினாயகரின் முன் கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விஷூவாக அனுசரிக்கப்படுகிறது.

மாணவர்கள் கல்வியில் சிறக்கவும்  எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்ரி வெற்றியுடன் நிறைவடையவும் தொழிலில் மேன்மையடையவும் பக்தர்கள் இங்கு வந்து வினாயகரை வேண்டிச் செல்கிறார்கள். புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குவோர் முதலில் இங்கு வந்து பூஜையிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.  பயணத்தின்போது சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.   வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்க ரதம் இழுத்தும் பூஜைகள் அபிஷேகங்கள் செய்தும் அன்னதானம் செய்தும் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்துகிறார்கள்.

கோவை உக்கடத்திலிருந்தும் காந்திபுரத்திலிருந்தும் ஈச்சனாரிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s