மதராசப் பட்டினம்

 

கடந்த ஆகஸ்டு 22 ம் தேதி 378 வது சென்னை தினம் கொண்டாடப்பட்டது.  இந்தத் தருணத்தில் சில ஃப்ளாஷ் பேக் நினைவுகள்

ரிப்பன் பில்டிங்

சென்னைக்குச் சிறப்பு சேர்க்கும் கட்டடங்களில் ஒன்று செனை கார்ப்பரேஷன் இயங்கும் ரிப்பன் பில்டிங்,  இந்தோசாராசெனிக் [ INDO SARACENIC ARCHITECTURAL ] பாணியில் வெள்ளை வெளேர் என்றிருக்கும் கட்டடத்தின் பெரும்பகுதியைக் கட்டியவர் லோக நாத முதலியார் என்ற தமிழர்தான்.  காமன்வெல்த் நாடுகளிலேயே முதலில் தோன்றிய கார்ப்பரேஷன் என்ற பெருமை சென்னை கார்ப்பரேஷனுக்கு உண்டு. 252 அடி நீளம்  126 அடி அகலம் மூன்று மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் முதல் மாடியே 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.  அதன் மத்தியில் உள்ள டவர் 132 அடி உயரம். எட்டடி விட்டத்தில் கடிகாரம் இதைக் கட்ட அந்தக் காலத்தில் ஏழரை லட்சம் ரூபாய் செலவானது. கட்டி முடிக்க நான்கு ஆண்டுகளாயின.

ஜார்ஜ் கோட்டை

கிழக்கிந்திய கம்பெனியார் கிழக்கு கடற்கரையோரம் ஒரு வியாபாரக் கிடங்கு கட்ட இடம் வாங்குவதற்கு முன்பே 16ம் நூற்றாண்டில் சென்னைக்குப்பம்  மதராஸ் குப்பம் ஆறு குப்பம் என்ற மூன்று சிறு குடியிருப்புக் கூடங்கள் இருந்தன. கி பி 1639ல் பிரான்சிஸ் டே  கோகன் என்ற இரு ஆங்கிலேய பிரதிநிதிகள்  கொஞ்சம் பொருட்களுடன் வைக்கோல் போர்த்திய குடிசைகளில் கிரஹப்பிரவேசம் நடத்தினார்கள்.  இதுதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆரம்பம். பின்பு நடுவே சதுரமாய் சுற்றிலும் நெடிய சுவர்களோடு கட்டப்பட்டதுதான் புனித ஜார்ஜ் கோட்டை.  இந்தியாவில் மேலை நாட்டவர்கள்  கட்டிய முதல் கோட்டை இதுதான்.  இந்தக்கோட்டைதான் தமிழக சட்ட சபையாக இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றிப்பணியாற்றி வருகிறது.  தமிழகத்தின் முதல் சட்ட சபை 1921 அம் ஆண்டு நடத்தப்பட்டது.

சேப்பாக்கம் அரண்மனை

சென்னை மாநகரில் ஒரு பரந்து விரிந்த விசாலமான அரண்மனை இருந்த்து.  இன்னும் இருக்கிறது என்ற தகவல் நிறைய பேருக்கு ஆச்சர்யமளிக்க கூடும்.  18ம் நூற்றண்டில் வட ஆற்காடு  தென்னாற்காடு திருச்சி திரு நெல்வேலி நெல்லூர் உள்ளிட்ட பகுதிகள் கர்னாடக நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தன.  இவரது தலை நகரம் ஆற்காட்டில் இருந்ததால்  இவரை ஆற்காடு நவாப் என மக்கள் அழைத்தனர்.  1749 ல் இந்த நவாப் பதவிக்காக ஒரு போர் நடந்தது.  ஆங்கிலேயர்கள் ஆதரவோடு ஆற்காடு நவாபான முகமது அலி அரியணையில் ஏறினார். அவரின் அரண்மனைதான் சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலத்தில் 1768ல் கட்டி முடித்ததுதான் இந்த பிரம்மாண்டமான அரண்மனை ஹூமாயுன் மஹால் கலஸ் மஹால் என இரண்டு பகுதிகளை கொண்டது.    இப்போது இந்த அரண்மனையைச் சுற்றிலும் பொதுப்பணித்துறை கட்டடம்  ஆவணக்காப்பகம் வருவாய்த் துறை கட்டிடம் எழிலகம் போன்றவை கட்டப்பட்டதால்  கொஞ்சம் நஞ்சம் தெரிந்த அரண்மனை முற்றிலும் மறைந்துவிட்டது.

 

டேர் ஹவுஸ்

தாமச் பாரி என்பவர் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ல் மெட்ராஸூக்கு வந்தார். வியாபாரத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார்.  இந்தச் சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான்  வில்லியம் டேர்.  கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய டேருக்கு இருந்ததால் இருவரும் சேர்ந்து கப்பல் தொழில் செய்து வந்தனர்.  பாரி கட்டிடத்தின் பெயர் டேர் ஹவுஸ் என்று  இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம்   இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. மெட்ராஸ் என்ற மா நகரின் வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இந்த இருவரை பாரிமுனையும் அங்கிருக்கும் வேர் ஹவுஸும் இன்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

ராயபுரம் ரயில் நிலையம்

கால் வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது.  ராயபுரம் ரயில்  நிலையம்.  தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம் தான்.  இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் ராயபுரத்திலிருந்து ஆற்காடுக்கு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.  1856 ல் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது  சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பாதையும் அமைக்கப்பட்டது.

விக்டோரியா மஹால்

சென்னையில் புகழ்வாய்ந்த கட்டிடம் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற மஹால்  விக்டோரியா மகாராணியாரின் பதவி ஏற்பின் கோல்டன் ஜூப்ளிக்காக அப்போதைய கார்ப்பரேஷன் பிரசிடென்டாய் இருந்த சர் எஸ் டி அருண்டேல் என்பவர் முயற்சியால் பொது மக்களிடமும் நன்கொடை பெற்றுக்கட்டபட்டது  இந்தோசாரா செனிக் பாணியில் ராபர்ட் சி ஷோம் என்பவரால் வடிவமைக்கப்பட்டு நம் பெருமாள் செட்டியாரால் கட்டப்பட்டு கவர்னர் லார்டு கன்னிமாராவால் 1887ல் திறந்து வைக்கப்பட்டது

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s