ஆரோக்கியத்தின் வாசல்

நம் உடல் ஆரோக்கியத்தில் நகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.  கை நகம்  கால் நகம் இரண்டுமே உடல் ஆரோக்கியத்தின் வாசல்களாகத் திகழ்கின்றன.  நகங்கள்  விரல் நுனியில் உள்ள மிக மென்மையான தசைகளைப் பாதுகாக்கின்றன. நகங்கள் கெராடின் என்ற புரதப் பொருள்களால் ஆனவை.

நகங்களின் பலம் தடிமன் வளர்ச்சி போன்றவை அவரவர் பெற்றோர்களின் மரபியல் ஆகும். நகம் ஒரு மாதத்தில் 3.5 மிமீ வளரும் தன்மை உடையது. கோடை காலத்தில் நகத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். நமக்கு ஏற்படும் நோய்களை வெளிப்படுத்துவதில் நகங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. சொரியாசிஸ் என்ற சரும பாதிப்பு இருந்தால் மிகச் சிரிய சொரசொரப்பான பள்ளங்களி நகங்களில் வெளிப்படும்.

நகத்தின் நுனி சற்று முன்புறம் வளைந்தாற்போல் இருந்தால் குடல்வீக்கம் கல்லீரல் பாதிப்பு நுரையீரல் பாதிப்பு நம்மை நெருங்குவதாய் அர்த்தம்.  ஸ்பூன் மாதிரி நகங்கள் குழி விழுந்து இருந்தால் ரத்த சோகை தைராய்டு குறைபாடு வரப்போவதற்கான அறிகுறி விரல் முழுவதும் வெள்ளையாகவும் விரல் நுனியில் ரோஸ் கலரிலும் இருந்தால் நமது சிறு நீரகத்தில் பாதிப்பு வரப்போகிறது என தெரிந்து கொள்ளலாம்.  நகத்தின் குறுக்கே வரிகள் காணப்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறி

நகங்களில் கண்ட கண்ட செயற்கை நகப்பூச்சுக்கள் பூசுவதை தவிர்க்க வேண்டும்  அதிக நேரம் ஈரத்தில் வைக்கக்கூடாது/ நகங்களை வெட்டும்போது நேராக வெட்ட வேண்டும்.  நகம் கடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறை கை கால் நகங்களை மிக மெதுவாய் பூப்பறிக்கும் பக்தனைப் போல நேசத்தோடு வெட்டி விடுங்கள் நகங்களை பாதுகாப்போம்  நலமுடன் வாழ்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s